இந்திய அணி இன்னைக்கு இந்த நிலைமைல இருக்க காரணமே ஐ.பி.எல் தான் – பிராட் ஹாக் குற்றச்சாட்டு

Hogg
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 16-ஆவது சீசனக்கான வேலைகள் தற்போதே துவங்கிவிட்டன. அந்த வகையில் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் வீரர்களின் மினி ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணிக்கு தேர்வு செய்து தங்களது அணியை பலப்படுத்த காத்திருக்கின்றன. அதனை தொடர்ந்து மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலேயே இந்த ஐபிஎல் தொடரானது நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

மேலும் இந்த தொடருக்கான புதிய விதிமுறைகள், அட்டவணைகள் என அனைத்துமே தற்போது மும்முரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து இருப்பதற்கு காரணம் ஐபிஎல் தொடர் தான் என்று பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் வீரர்களும் கூறிவந்த வேளையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக்கும் அதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் தற்போது இருக்கும் இளவீரர்கள் பெரும்பாலானோர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். ஏனெனில் ஐபிஎல் தொடர் போன்ற மிகப்பெரிய ஒரு பணம் கொழிக்கும் தொடரில் அவர்கள் விளையாடும் போது குறைவான நேரத்திலேயே அதிக அளவு பணத்தை சம்பாதித்து விடுகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு எளிதாக அவர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவு பணம் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. இதன் காரணமாகவே தேசிய அணிக்காக அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் டி20 போட்டிகளில் மட்டுமே ஃபோகஸ் செய்து விளையாடுகின்றனர்.

Ipl

அதோடு ஐபிஎல் தொடரில் அவர்களது சிறப்பான ஆட்டம் வெளிப்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிவிட்டு நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள பிரஷர் காரணமாக அவர்களால் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் போகிறது. இதன் காரணமாக பலரும் வந்த உடனே வாய்ப்பை பெற்று விரைவிலேயே வெளியேறுகின்றனர்.

- Advertisement -

ஆனால் உண்மையிலேயே இந்திய அணியில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க வேண்டுமெனில் ரஞ்சிக்கோப்பை, சையத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களில் நிலையான செயல்பாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே அது இந்திய கிரிக்கெட் அணிக்கு பயனை தரும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் டீம்ல இவரை சேக்காதது ரொம்ப தப்பு. இந்திய அணித்தேர்வை விளாசிய – முகமது கைப் பேட்டி

ரோகித் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் பல ஆண்டுகாலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு எந்தெந்த அணிக்கு எதிராக. எந்த பவுலர்களுக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர்களிடம் இருந்து இளம் வீரர்கள் பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் அப்படி கற்றுக் கொண்டால் அவர்களால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் பிராட் ஹாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement