ஹார்டிக் பாண்டியாவா ? பென் ஸ்டோக்ஸ்ஸா ? யார் சிறந்த ஆல்ரவுண்டர் – பிராட் ஹாக் பதிலை பாருங்க

Hogg

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தினால் பல நாடுகள் தற்போது பயங்கர ஆபத்தை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போது எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிக்கப்போகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

hogg

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. அரசாங்கமும் தடுப்பு நடவடிக்கையாக மக்களை வெளியில் வர வெளியே வராத வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு போட்டிகள், பொது நிகழ்ச்சிகள், அரசாங்க நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -

இதனால் இந்தியாவே தற்போது முடங்கி உள்ளது. மேலும் இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் மக்கள் தனிமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த வேளையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கிரிக்கெட் குறித்த தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹக் ட்விட்டர் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்படி ஒரு ரசிகர் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்டிக் பண்டியா மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த ஹாக் கூறுகையில் : இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பண்டியா நிச்சயம் திறமைசாலிதான். மேலும் அவர் ஒரு தரமான ஆல்ரவுண்டர் தான் இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் அளவிற்கு அவர் சவால் அளிக்கும் வகையில் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் இன்னும் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது எனவே என்னுடைய தற்போதைய தேர்வு பென் ஸ்டோக்ஸ் தான் என்று பதிலளித்துள்ளார்.

அவரின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளன. மேலும் பென் ஸ்டோக்ஸ் பல ஆண்டு அனுபவம் வாய்ந்தவர் ஆனால் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பாண்டியா கண்டிப்பாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை கூறினர். இந்திய அணியின் இளம் வீரரான ஹர்டிக் பண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கபில் தேவை நினைவு படுத்துவதாக பலரும் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement