- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மறுபடியும் நடந்தா நல்லாருக்கும்.. இந்த 2 காரணத்தால் இந்தியாவை சூப்பர் 8இல் ஆஸி தோற்கடிக்கும்.. ப்ராட் ஹோக்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நடைபெற்ற லீக் சுற்றில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றியை ருசித்தது. அதே வேகத்தில் அமெரிக்காவையும் வீழ்த்திய இந்தியா கடைசி போட்டியில் கனடாவை சந்திக்கிறது.

அதை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு செல்லும் இந்தியா அங்கு நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ளது. அந்த சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை இந்தியா எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை இந்தியா வீழ்த்தும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

சூப்பர் 8 வெற்றி:
எனவே ஆஸ்திரேலியா மட்டுமே இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றாலும் கூட இந்தியா மற்ற 2 போட்டிகளில் வென்றால் செமி ஃபைனலுக்கு செல்லும். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் மீண்டும் இந்தியாவை எதிர்கொண்டு ஆஸ்திரேலியா வெல்வதை பார்க்க விரும்புவதாக முன்னாள் வீரர் ப்ராட் ஹோக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா கண்டிப்பாக இந்தியாவை தோற்கடிக்கும் என்று தெரிவிக்கும் அவர் அதற்கான 2 காரணம் பற்றி பேசியது பின்வருமாறு. “சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாட உள்ளன. அதில் அந்த 2 அணிகளுமே ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தி செமி ஃபைனல் செல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அது நடைபெற்றால் மீண்டும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் ஃபைனலில் மோதும்”

- Advertisement -

“அதை நான் பார்க்க விரும்புகிறேன். அதற்கு முன்பாக சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகம் உள்ளது. ஏனெனில் அவர்கள் இத்தொடரில் ஏற்கனவே ஸ்லோவான பிட்ச்களை கொண்ட கடினமான வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் இந்திய அணி வேகத்துக்கு சாதகமான நியூயார்க் பிட்ச்சில் விளையாடி வருகின்றனர். அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்னும் நல்ல ஃபார்மை பெறவில்லை”

இதையும் படிங்க: ஷாகிப் சும்மா நம்பர் ஒன்னாகல.. சச்சின் மாதிரி உங்களுக்கு இது தெரியாதா? சேவாக்கை விளாசிய கைய்ஸ்

“மேலும் அவர்கள் ஃபிளாட்டான பிட்ச்களை கொண்ட ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு வருகிறார்கள். எனவே அந்த சூழ்நிலைகளில் விளையாடியவர்கள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு தங்களை அட்ஜஸ்ட் செய்வது மிகவும் கடினம். அதனால் சூப்பர் 8 இந்தியாவுக்கு கடினமானதாக இருக்கும். ஆனால் அவர்கள் ஃபைனலுக்கு வரும் போது போட்டி வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் அவர்களும் சூழ்நிலைகளை பயன்படுத்தியிருப்பார்கள்” என்று கூறினார்.

- Advertisement -