அந்த மைதானத்தில் யாருமே ஆஸ்திரேலியாவை ஜெயிச்சது கிடையாது. அதான் இந்திய அணிக்கு பயம் – ஹடின் நக்கல்

Haddin

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது முதலிரு போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி வரும் 7ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்க உள்ளது .இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து 4வது போட்டி பிரிஸ்பேன் நகரில் “கப்பா” என்று அழைக்கப்படும் மைதானத்தில் நடைபெறுகிறது.

IND

அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அதிக அளவு கடைபிடிக்க படுவதால் அதனை காரணம் காட்டி அங்கு செல்ல விரும்பவில்லை என்று இந்திய அணி தரப்பில் இருந்து ஒரு செய்தி வெளியானது. மேலும் இந்த மைதானத்தில் சுமார் 30 வருடத்திற்கும் மேலாக எந்த அணியும் அங்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது கிடையாது. இந்திய அணியும் அந்த மைதானத்தில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் இதனை காரணம் காட்டி இந்திய அணியை நக்கல் செய்யும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பிராட் ஹடின் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : கிரிக்கெட் பார்வையில் பார்க்கும் போது இந்திய அணி ஏன் கப்பா செல்ல விரும்பும் ? அந்த மைதானத்தில் யாரும் ஆஸ்திரேலியாவை வென்றது கிடையாது. ஆஸ்திரேலிய அணியும் அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

அந்த குறிப்பிட்ட மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எந்த ஒரு அணியையும் வீழ்த்தியதே இல்லை. இந்த விஷயத்தை இந்திய வீரர்கள் நினைக்க வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட நாட்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து இந்தியர்கள் சற்று சோர்வடைந்து இருக்கலாம். இதனால் போட்டியை எங்கும் மாற்ற முடியாது. ஆஸ்திரேலியா வரும்போதே இங்கு என்ன நடைமுறை இருக்கிறது என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும்.

- Advertisement -

rahane 1

இங்குள்ள கட்டுப்பாடுகளும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் இதுதான் நடக்கும் என்று தெரிந்து இந்தியர்கள் அடம் பிடிக்கின்றனர். இந்திய அணியை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர்களும் நீண்ட நாட்கள் குவாரன்டைனில் இருந்துள்ளனர். அவர்கள் இதுபோன்று கேட்கவில்லை என்னை பொறுத்தவரை இந்திய அணி அங்கு விளையாடக் கூடாது என்பதற்காகவே இதனை முயற்சி செய்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்று ஹடின் கிண்டலாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.