தோனி மாதிரி ஆகலாம்னு நினைக்காதீங்க. அது உங்களால முடியாது – இந்திய வீரரை அட்வைஸ் கொடுத்த பிராட் ஹாடின்

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இருந்து வெளியேறியபிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. சிறிது காலம் விடுப்பு எடுத்து ராணுவ பயிற்சியில் பங்கேற்றார்.

dhoni

- Advertisement -

அந்த பயிற்சிக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் வரவில்லை. இதற்கிடையில், பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்திலிருந்து மகேந்திர சிங் தோனி திடீரென நீக்கப்பட்டு இருந்தார்.இதனால் இந்திய அணியில் தோனியின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனது. இதனால் இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என பல விமர்சனங்கள் வெளிவந்தன.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் பயன்படுத்தப்பட்டு வந்தார். ஐபிஎல் தொடரில் தனது அதிரடியால் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்த ரிஷப் பண்ட் இந்திய அணியிலும் தோனி போன்று மிகச் சிறந்தவராக பினிஷராக வருவார் என பலரும் அவரை நம்பி இருந்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் ரிஷப் பண்ட்.

dhoni with pant

காரணம் இவரது தொடர்ச்சியான சொதப்பலான ஆட்டங்களில் இந்திய அணி தோல்விக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கீப்பிங்கில் மேலும் ஒரு சில தவறுகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதுமட்டுமன்றி தோனியின் இடத்திற்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் நேரடியான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.

- Advertisement -

இதற்கிடையில், ரிஷப் பண்ட் மற்றும் தோனியின் ஒப்பீடு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், தோனி போன்ற மிகப்பெரிய வீரரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் அந்த இடத்தில் பண்ட் போன்ற வீரரை இளம் வயதிலேயே வைத்து பார்க்க வேண்டாம். இது அவரை மிகுந்த நெருக்கடிக்கு தள்ளிவிடும்.

Pant-1

அவரும் அந்த ஒரு மனநிலையில் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடாது. தன்னுடைய திறன் எதுவோ அதை சார்ந்து அவர் செயல்பட்டால் வரும் காலங்களில் உயர்ந்த இடத்தை நோக்கி நகரலாம் என குறிப்பிட்டார். தோனி போன்று செயல்பட நினைப்பதை விட தனக்கு என்ன வருமோ அதனை செய்தால் பண்ட் சாதிக்கலாம் என்று ஹாடின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement