அவரு டீமுகுள்ள வந்துட்டா இந்தியாவ வின் பண்ண முடியாது.. இங்கிலாந்து அணிக்கு ஜெப்ரி பாய்காட் அட்வைஸ்

Boycott
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸ்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றும் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் எதிர்வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி விளையாட மாட்டார் என்பதாலும் ஏற்கனவே முதல் போட்டியில் அசத்தலாக செயல்பட்ட கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெளியேறி இருப்பதாலும் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவை இரண்டாவது போட்டியிலும் தோற்கடித்து தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இங்கிலாந்து அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

கேப்டன் ரோகித் சர்மாவிடம் பழைய ஃபார்ம் இல்லை. அவர் தற்போது 37 வயதில் இருக்கிறார் எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் பீல்டிங்கும் தற்போது வலுவாக இல்லை. தற்போது விராட் கோலி இல்லாத நிலையில் ஜடேஜாவும் வெளியேறியிருப்பது அவர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. இதனை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அவர் கேப்டனா இருந்தா இந்தியா தோத்துருக்காது.. ரோஹித் ஸ்விட்ச் ஆஃப் ஆகிட்டாரு.. மைக்கேல் வாகன் விமர்சனம்

மேலும் கோலி குறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி இந்திய அணியின் தூண் போன்றவர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. போட்டிக்கு 60 ரன்கள் சராசரியுடன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்யும் அவர் பீல்டிங்கிலும் அசத்தக்கூடியவர் அதனால் அவருடைய இழப்பு இந்திய அணிக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement