பேட்ஸ்மேனை பந்தால் அடித்த பவுலர். அம்பயர் கொடுத்த பனிஷ்மன்ட். இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கா ? – விவரம் இதோ

Eng
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. முதன்முதலாக தற்போது இங்கிலாந்தில் சர்வதேச டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.
அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் தொடங்கிவிட்டன. அந்த போட்டிகளும் ரசிகர்கள் இன்றி காலியான மைதானத்திலேயே நடைபெற்றது.

eng 2

தற்போது அங்கு பாப் வில்லிஸ் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்த தொடரில் 18 அணிகள் பங்கேற்று நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஒரு போட்டியில் லங்காஷயர் மற்றும் லீசெஸ்டர்ஷையர் ஆகிய அணிகள் மோதிக்கொண்டிருந்தன. முதலில் பேட்டிங் செய்த லங்காஷயர் அணி 371 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த ஆட்டத்தின் போது 104வது ஓவரை வீசிய பந்து வீசிய லீசெஸ்டர் அணியின் பந்துவீச்சாளர் டைட்டர் கிளீன் திடீரென பந்தை கையில் எடுத்து, பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்த டேனி லேம் மீது பந்தை அடித்தார்.

eng 1

இதனை பார்த்து உடனடியாக சுதாரித்த நடுவர்கள், அவர்மீது விதிகளுக்கு புறம்பான செய்கை என்று பதிவு செய்தனர். மேலும் கிரிக்கெட் விதிகளின்படி வீரர் மீது பந்தை அபாயகரமான முறையில் அடித்ததால் பேட்டிங் பிடித்துக் கொண்டிருக்கும் அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்படும்.
அதன்படி 5 ரன்களும் கொடுக்கப்பட்டது.

பின்னர் பேட்ஸ்மேன் பந்து பட்டதால் வலி தாங்க முடியாமல் களத்தை விட்டு சென்றார். இந்த செயலுக்கு அந்த குறிப்பிட்ட பந்துவீச்சாளர் இடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் அந்த குறிப்பிட்ட பவுலர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement