தோனி இதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க மாட்டார். நிச்சயம் அவர் டி20 உலகக்கோப்பையில் இதனை செய்வார் – பிராவோ நம்பிக்கை

Bravo

இந்திய அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான தோனி உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். உலக கோப்பை தொடருக்கு பின்னர் சில மாதங்கள் துணை ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி அதன்பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

Dhoni-1

மேலும் கடந்த சில தொடர்களாகவே இந்திய அணியில் தோனியின் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது இதனால் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வினை அறிவிப்பார் என்று பலதரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகிய நிலையில் இதுவரை தனது ஓய்வு குறித்து தோனி எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தற்போது சென்னை அணியின் வீரரும், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டருமான பிராவோ தோனியின் ஓய்வு குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனி இன்னும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கவில்லை ஆகவே அவர் நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று நான் நினைக்கிறேன்.

bravo-dhoni

மேலும் அவர் களத்திற்கு வெளியே நடக்கும் விஷயங்களை எப்போதும் பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள எங்களுக்கும் அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார். களத்திற்கு வெளியே எந்த ஒரு வதந்திகள் உலா வந்தாலும் அதனை கண்டு அஞ்சாமல் தனது திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர் நிச்சயம் டி20 உலக கோப்பையில் பங்கேற்று இந்திய அணிக்காக வெற்றிகளைப் பெற்றுத் தருவார் என்று பிராவோ கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -