- Advertisement -
ஐ.பி.எல்

இந்த வருஷம் முதல் முறையா அது ஹெல்ப் பண்ணுச்சு.. ராஜஸ்தானை வீழ்த்திய ஆட்டநாயகன் புவனேஸ்வர் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே இரண்டாம் தேதி நடைபெற்ற 50வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் 4வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 58, நிதிஷ் ரெட்டி 76*, ஹென்றிச் க்ளாஸென் 42* ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு பட்லர், சாம்சன் டக் அவுட்டானாலும் ரியன் பராக் 77, ஜெய்ஸ்வால் 67 ரன்கள் எடுத்ததால் வெற்றி உறுதியானது. ஆனால் கடைசியில் துருவ் ஜுரேல் 1, ஹெட்மயர் 13, ரோவ்மன் போவல் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் புவி:
அதனால் 20 ஓவரில் ராஜஸ்தானை 200/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். குறிப்பாக கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது ரோவ்மன் போவல் விக்கெட்டை எடுத்து த்ரில் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் 7 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் இந்த வருடம் முதல் முறையாக இப்போட்டியில் பந்து நன்றாக ஸ்விங்கானதாக புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். எனவே அதை பயன்படுத்தி கடைசி ஓவரில் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் தன்னம்பிக்கையுடன் பந்து வீசி வெற்றி பெற்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அமைதியாக இருப்பது என்னுடைய இயற்கை. செயல்முறை முக்கியம். அதனால் நான் முடிவைப் பற்றி எதையும் நினைக்காமல் கடைசி ஓவரை வீச சென்றேன்”

- Advertisement -

“அப்போது பட் கமின்ஸ் என்னிடம் வந்து அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்று கேட்டார். அதை தவிர்த்து வேறு எதுவும் விவாதிக்கவில்லை. செயல்முறையில் மட்டும் கவனம் செலுத்தினேன். குறிப்பாக கடைசி 2 பந்துகளுக்கு போட்டியை எடுத்துச் சென்றால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைத்தேன். எக்ஸ்ட்ரா ஃபீல்டரை நிறுத்துவதை பற்றி நினைக்கவில்லை”

இதையும் படிங்க: நல்லா உத்து பாருங்கய்யா.. அநீதியான தீர்ப்பை வழங்கிய அம்பயர்.. கொதித்த சங்கக்காரா.. அடுத்த பந்தில் ட்விஸ்ட்

“இந்த வருடம் அதிகமாக ஸ்விங்கானது இதுவே முதல் போட்டியாகும். அது எங்கே ஸ்விங் ஆனது என்று சரியாக சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஸ்விங் கிடைக்கும் போது நீங்கள் விக்கெட் எடுக்க முயற்சிக்கலாம். அதிர்ஷ்டமாக அது எனக்கு கிடைத்தது. செஷன் துவங்கும் போது என்னுடைய சிந்தனை செயல்முறை வித்தியாசமாக இருந்தது. ஆனால் நாங்கள் பேட்டிங் துவங்கியதும் அது முற்றிலுமாக மாறியது. பொதுவாக நாங்கள் பந்து வீசும் போது எதிரணிகளை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முயற்சிப்போம்” என்று கூறினார்.

- Advertisement -