Bhuvneshvar Kumar : மூன்று வருடங்களில் இதுவே ரஷீத் கானுக்கு முதல் முறை. இதுவே தோல்விக்கு காரணம் – புவி பேட்டி

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான

Bhuvi
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.

Dhoni 2

- Advertisement -

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 49 பந்துகளில் 83 ரன்களை குவித்தார், வார்னர் 57 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணிக்கு 176 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய சென்னை அணி துவக்க வீரரான வாட்சன் அதிரடி மூலம் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து ஆட்டமிழந்தார். ரெய்னா 38 ரன்களை அடித்தார். வாட்சன் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Watson

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய புவனேஷ்வர் குமார் கூறியதாவது : இந்த மைதானத்தில் நாங்கள் அடித்த ரன்கள் வெற்றிக்கு போதுமானது என்றே நினைக்கிறன். மைதானத்தில் டியூ இருந்தும் அது பெரிதளவில் எங்களை பாதிக்கவில்லை. வாட்சன் சிறப்பாக ஆடினார். ரஷீத் கானுக்கு மூன்று வருடத்தில் இதுவே முதல் முறை அவர் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுப்பது. அவரை வாட்சன் சிறப்பாக எதிர்கொண்டு அடித்தார். இதுவும் தோல்விக்கு ஒரு காரணம்.

Rashid

பேர்ஸ்டோவை பெரிதும் இழக்கிறோம். அவருக்கு மாற்று வீரர்கள் அணியில் இருக்கின்றனர் ஆனால், அவரை போன்ற அதிரடியான வீரர் இல்லை என்பது வருத்தம். இன்னும் நான்கு போட்டிகள் உள்ளன அதில் மூன்று போட்டிகள் வெளிமைதானங்களில் நடக்கின்றன. அதில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவோம் என்றும், கேப்டன்சியில் நிறைய விடயங்களை கற்று வருவதாகவும் புவனேஷ்வர் குமார் கூறினார்.

Advertisement