பயிற்சிபோட்டியில் அசத்திய சொதப்பல் மன்னன். தவான் அணியை வீழ்த்திய புவி அணி – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது ஜூலை 13-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்று அடைந்து விட்டது. இந்த தொடரில் தவான் தலைமையில் விளையாட இருக்கும் இந்திய அணி ராகுல் டிராவிட் தலைமையில் தற்போது பயிற்சி பெற்று வருகிறது.

dravid

- Advertisement -

இதனால் இந்த இளம் அணி எவ்வாறு செயல்படும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய படிக்கல், சக்காரியா போன்ற பல புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதனாலும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணி வீரர்களுக்கு உள்ளேயே இரு அணிகளாகப் பிரிந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு அணிக்கு தவான் கேப்டனாகவும், மற்றொரு அணிக்கு புவனேஸ்வர் குமார் கேப்டனாகவும் கலந்துகொண்டு ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாடினார்கள். இந்த போட்டி முடிந்து அந்தப் போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சில தகவல்களை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Pandey-1

இந்த போட்டியில் டாஸ் வென்ற தவான் தலைமையிலான அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை குவித்தது. கெய்க்வாட் சிறப்பாக விளையாடி 30 ரன்கள் குவித்தார். அடுத்து மனிஷ் பாண்டே 63 ரன்கள் எடுத்து அசத்தினார் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மிகவும் பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்து சன் ரைசர்ஸ் அணியின் தோல்வி காரணமாக அமைந்து அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மனிஷ் பாண்டே மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ள நிலையில் அவர் சிறப்பாக ஆடி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Padikkal

அதேபோன்று தொடர்ந்து பேசிய அவர் : புவனேஸ்வர் குமார் தலைமையிலான அணி 151 ரன்களை 17 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது என்றும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி படிக்கல் மற்றும் ப்ரித்வி ஷா ஜோடி சிறப்பாக விளையாடி 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement