அப்பாடா ஒரு வழியாக முடிவுக்கு வந்த கோலியின் 5 மாத சோகம் – புவனேஷ்வர் குமார் வெளியிட்ட தகவல்

Bhuvi
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் போட்டி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

bhuvi

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 120 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 71 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியதாவது : கோலி இந்த போட்டியில் சதம் அடித்ததும் அவர் அந்தச சதத்தை கொண்டாடிய விதத்தை பார்த்தீர்களா ? எவ்வளவு ஆக்ரோஷமாக கொண்டாடினார். அதன் காரணம் யாதெனில் கடந்த 5 மாதங்களாக அவரால் செஞ்சுரி அடிக்க முடியவில்லையே என்ற சோகம் அவர் மனதில் இருந்து இருந்துள்ளது.

kohli 1

கடைசியாக அவர் மார்ச் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செஞ்சுரி அடித்தார். அதன் பிறகு உலகக்கோப்பையில் ஐந்து அரை சதங்கள் அடித்து இருந்தாலும் அவரால் சதம் அடக்கமுடியவில்லை. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தனது செஞ்சுரி அடித்த கோலி 5 மாத சோகத்தை தீர்த்துக் கொண்டார் என்று பேட்டி அளித்து இருந்தார் புவனேஷ்வர் குமார். நேற்று கோலி அடித்த சதம் அவருடைய 42 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement