
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமாருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்தியாவின் புதிய பரிமாற்றம் காரணமாகவும், இளம் பந்துவீச்சாளர்களின் வருகையின் காரணமாகவும் இந்திய அணியில் தனது இடத்தை இழந்த புவனேஸ்வர் குமார் உள்ளூர் போட்டியிலும், ஐ.பி.எல் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரது சிறப்பான செயல்பாடு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்து வரும் அவர் கடைசியாக மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் ஒரு சிக்சரை அடித்து ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார்.
இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 36 வயதான புவனேஸ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மிக முக்கியமான பதில் ஒன்றினை அளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தற்போது நான் இந்திய அணிக்கு திரும்புவதில் கவனம் செலுத்தவில்லை. நீண்ட கால இலக்குகளை நிர்ணயிப்பதை ஏற்கனவே நிறுத்தி விட்டேன்.
தற்போது ஐபிஎல் தொடரில் ரசித்து விளையாடி வருவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறுகையில் : நான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பவது பற்றி யோசிக்கவில்லை. நீண்ட கால இலக்குகளை நிர்ணயிப்பதை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ஏனென்றால் நான் எப்போது கடினமாக உழைத்தாலும் எனக்கு வாய்ப்பு கைகூடவில்லை.
இதையும் படிங்க : ஒரே போட்டியில் 2 மோசமான சாதனைகளை சந்தித்து தோற்ற சன் ரைசர்ஸ் அணி – விவரம் இதோ
தற்போது 200 ஐ.பி.எல் போட்டிகளுக்கு மேல் விளையாடி பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் உழைத்ததற்கு கிடைத்த வெகுமதி தான் தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வருகிறேன். தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் மட்டும் என்பதே என்னுடைய இலக்கு என புவனேஷ்வர் குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.