ஒரே போட்டியில் 2 மோசமான சாதனைகளை சந்தித்து தோற்ற சன் ரைசர்ஸ் அணி – விவரம் இதோ

SRH
- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 82 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இந்த தொடருக்கான புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

2 மோசமான சாதனைகளை நிகழ்த்திய சன் ரைசர்ஸ் அணி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும் குவித்தனர். பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது : குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிஸோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். நேற்றைய போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சன் ரைசர்ஸ் அணியானது 2 மோசமான சாதனைகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த வகையில் அவர்கள் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் :

இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டான போட்டியாக இந்த போட்டி மாறியுள்ளது. இதற்கு முன்னதாக கடைசியாக 2019-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் 96 ரன்கள் குவித்ததே ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் அடித்த குறைந்தபட்ச ரன்களாக இருந்தது. இவ்வேளையில் நேற்றைய போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக 86 ரன்களுக்கு சுருண்டதின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் மிக குறைந்த ரன்களில் அவர்கள் சுருண்ட போட்டியாக இந்த போட்டி மாறியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 போட்டிகளில் இப்படி நடப்பது சகஜம் தான்.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் – பேட் கம்மின்ஸ் பேச்சு

அதேபோன்று ஐ.பி.எல் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய போட்டியாகவும் இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் அணி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த ஆண்டு 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அவர்கள் இந்த போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement