வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணிக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட நான் தயார் – சீனியர் வீரர் அதிரடி

IND
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதே வேளையில் ஷிகார் தவான் தலைமையிலான மற்றொரு அணியினரும் இலங்கை சென்று அங்கு ஒருநாள் மற்றும் டி20 ஆகிய தொடர்களில் விளையாட தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணிக்காக தனக்கு மூன்றுவித கிரிக்கெட்டிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவதற்கு தயார் என சீனியர் வீரர் புவனேஷ்வர் குமார் வெளிப்படையாக பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

ind

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் புவனேஸ்வர் குமார் நிச்சயம் இருந்திருக்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என்று என்று பலரும் கூறி இருந்தனர். ஆனால் காயம் காரணமாக அவரால் அந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

அதனை தொடர்ந்து தற்போது இலங்கை சென்றுள்ள புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக விளையாடவுள்ளார். பல மாத இடைவெளிக்கு பின்னர் அணிக்கு திரும்பியுள்ள புவனேஷ்வர் குமார் தனது அபாரமான பந்து வீச்சை இந்த தொடரில் வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்பாக பேட்டியளித்த அவர் கூறுகையில் :

Bhuvi

நான் டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் போட்டி, டி20 போட்டி என எதையும் பிரித்துப் பார்ப்பதில்லை என்னை பொறுத்தவரை அணிக்கு முழுமையாக பங்களிப்பை தர வேண்டும் அது மட்டுமே என்னுடைய இலக்கு. ஒருவேளை எனக்கு மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயம் விளையாட தயாராக இருக்கிறேன். மேலும் அதற்காக என்னை நான் தயார்படுத்தி வருகிறேன் என புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டில் நிச்சயம் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றிருக்க வேண்டும் என அனைவரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் புவனேஸ்வர் குமார் தற்போது இலங்கை தொடரில் இளம் பந்துவீச்சாளர்களை வழிநடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement