பும்ரா செய்ஞ்ச இந்த ஒரு தப்பு தான். ஐ.சி.சி. கோப்பையை பறித்தது – புவனேஷ்வர் குமார் வெளிப்படை

Bhuvi

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக திகழ்கிறார். அவ்வப்போது ஏற்படும் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து தொடர்ச்சியாக விளையாட முடியாமல் இருக்கும் இவர் காயம் காரணமாக சிறிது சறுக்கலை சந்தித்து வருகிறார். அதனால்தான் அவரால் தொடர்ச்சியாக இந்திய அணியில் ஆட முடியவில்லை.

Bhuvi-1

ஆனால் இப்போது காயம் குணமடைந்து அணிக்குத் தேர்வு ஆனாலும் அவருக்கான இடம் உறுதி மேலும் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு அவர் தனது திறமையை தக்க வைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது இ.எஸ்.பி.என் கிரிக் இன்போவிற்கு பேட்டியளித்த அவர் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்று குறித்து தற்போது சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி இங்கிலாந்தில் நடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் போதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 338 ரன்கள் என்ற இமாலய ரன் குவிப்பை எடுத்தது. அதன் பிறகு ஆடிய இந்திய அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Bumrah

மேலும் அந்த ஐ.சி.சி தொடரை பாகிஸ்தான் வென்றது. அந்த போட்டியின் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரரான பகார் ஜமான் அவுட் ஆகவேண்டியது. ஆனால் பும்ராவின் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆன அவர் அந்த பந்து நோபால் ஆனதால் அதனை பயன்படுத்தி அவர் சதமடித்து 114 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவினார்.

- Advertisement -

இதை சுட்டிக்காட்டி பேசிய புவனேஷ்வர் குமார் கூறுகையில் : அந்த போட்டியில் முதல் 15 நிமிடங்களிலேயே இந்திய அணி 3-4 விக்கெட்டுகளை இழந்து விட்டது. அது தான் துரதிஷ்டவசமாக நமது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. ஆனாலும் இந்த போட்டியில் பும்ரா வீசிய அந்த நோ பால் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது. அதனால் அந்த போட்டி ஒருதலைபட்சமான முடிவை பெற்றது. சில சமயம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்.

Zaman

அதுபோன்ற நடைபெறும் போதெல்லாம் நாம் தோல்வி அடைந்து இருக்கிறோம். அதுமாதிரி சம்பவங்களால் நாம் ஒரு கோப்பையை இழந்தது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.