துல்லியத்துக்கு பெயர் போன புவி இஸ் பேக்! ஐபிஎல் வரலாற்றில் புதிய அபார சாதனை – என்ன தெரியுமா?

Bhuvi
- Advertisement -

ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மார்ச் 29-ஆம் தேதியன்று புனே நகரிலுள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 5-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

Sanju Samson SRH

- Advertisement -

இதை அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 28 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 35 ரன்களும் யசஸ்வி ஜெய்ஸ்வால் 16 பந்துகளில் 20 ரன்களும் விளாசி நல்ல தொடக்கம் கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதை அப்படியே பயன்படுத்தி வெறும் 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 55 ரன்களை அதிரடியாக குவித்தார்.

மிரட்டிய ராஜஸ்தான்:
அவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய தேவுட் படிக்கள் தனது பங்கிற்கு 29 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 41 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி நேரத்தில் அதே அதிரடியை மீண்டும் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையர் வெறும் 13 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 32 ரன்களை விளாசி அபார பினிஷிங் கொடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த ராஜஸ்தான் 210 ரன்களை குவித்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய தமிழக வீரர் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதை அடுத்து 211 என்ற மிகப்பெரிய இலக்கை சேசிங் செய்ய களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு எதிராக மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஜஸ்தான் பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தொடக்க வீரர் கேன் வில்லியம்சன் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தனர். இதனால் ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணி அபிஷேக் சர்மா 9 ரன்களிலும் அப்துல் சமத் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததால் 37/5 என மேலும் சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

- Advertisement -

ராஜஸ்தான் மிகப்பெரிய வெற்றி:
அதன்பின் நடுவரிசையில் களமிறங்கிய ரொமானியா செபரட் 18 பந்துகளில் 24 ரன்களும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். மறுபுறம் வெற்றிக்காக போராடிய ஐடன் மார்க்ரம் 41 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 57* ரன்கள் எடுத்து தனது அணியின் மானத்தை ஓரளவு காப்பாற்றிய போதிலும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே சரிந்த ஹைதெராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149/7 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான தோல்வியை சந்தித்தது.

RR vs SRH

மறுபுறம் முதலில் பேட்டிங்கில் தெறிக்கவிட்ட ராஜஸ்தான் அதன்பின் பந்துவீச்சில் மிரட்டலாக செயல்பட்டு முதல் போட்டியிலேயே 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக இந்த வருட ஐபிஎல் தொடரை மிகப்பெரிய வெற்றியுடன் தொடங்கிய அந்த அணி 2 புள்ளிகளை பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

- Advertisement -

புவி இஸ் பேக்:
முன்னதாக இந்த போட்டியில் ஹைதராபாத் தோல்வியடைந்த போதிலும் அந்த அணியைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஒரு காலத்தில் துல்லியமாக பந்துவீசி எதிரணிகளை திணறடிக்க கூடிய பவுலராக வலம் வந்த அவர் 3 வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் முக்கிய பந்துவீச்சாளராக உருவெடுத்தார். அந்த வேளையில் கடந்த 2018-ஆம் ஆண்டு காயத்தால் விலகிய அவர் அதிலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடிய போதிலும் பழைய புவனேஸ்வர் குமாராக பந்துவீச முடியாமல் பார்ம்மை இழந்து திணறி வந்தார்.

Bhuvi

குறிப்பாக துல்லியமாக பந்து வீசுபவராக அறியப்பட்ட அவரை சமீப காலங்களாக எதிரணி பேட்ஸ்மென்கள் சரவெடியாக அடித்து ரன்களை விளாசினர். இதே காரணமாக இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள அவர் தற்போது டி20 அணியிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அப்படிப்பட்ட இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அசத்திய அவர் நீண்ட நாட்களுக்கு பின் துல்லியமாக பந்துவீச தொடங்கியுள்ளார்.

- Advertisement -

நேற்றைய போட்டியுடன் சேர்த்து இதுவரை 1270 டாட் பந்துகள் அதாவது ரன் எதுவும் எடுக்காத பந்துகளை வீசியுள்ள அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக டாட் பால்களை வீசிய பந்து வீச்சாளர் என்ற ஹர்பஜன்சிங் சாதனையை உடைத்து புதிய அபார சாதனை படைத்துள்ளார். அதிலும் அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன்சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற இதர பந்துவீச்சாளர்களை காட்டிலும் ஒவ்வொரு இன்னிங்ஸ்க்கும் குறைந்தது சராசரியாக 9.62% டாட் பால்களை வீசிவரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் துல்லியமான பவுலராக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்டிற்கு சரியான போட்டியளிக்கும் அதிரடி வீரர் – டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் அதிக டாட் பால் பந்துகளை வீசி பவுலர்களின் பட்டியல் இதோ:
1. புவனேஸ்வர் குமார் : 1270* (9.62% சராசரி டாட் பந்துகள்)
2. ஹர்பஜன் சிங் : 1268 டாட் பால்கள் (7.77% சராசரி டாட் பந்துகள்)
3. ரவிச்சந்திரன் அஷ்வின் : 1265 டாட் பால்கள் (7.57% சராசரி டாட் பந்துகள்)

Advertisement