ஐ.சி.சி அறிவிக்க உள்ள இந்த மாதத்திற்கான விருது. 3 ஆவது முறையாக வாங்கவுள்ள இந்திய வீரர் – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

ஐசிசி இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து விருது கொடுக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. ஐசிசி இந்த விருதை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுள் ஒரு சிறந்த வீரருக்கு விருதை கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. ஐசிசி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் ரிஷப் பண்ட் என முடிவு செய்து அவருக்கு அந்த விருதை கொடுத்தது.

icc

- Advertisement -

அதற்கு அடுத்த மாதமான பிப்ரவரி மாதம், சிறந்த வீரர் என்கிற அடிப்படையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதையடுத்து அவருக்கு அந்த விருதை கொடுத்தது. இதற்கு அடுத்த மாதமான மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐசிசி தற்பொழுது வெளியிட உள்ளது. மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் புவனேஷ்வர் குமார் தான் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். அவருக்கு அந்த விருது கிடைக்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டு வருகின்றனர்.

ஐசிசி தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்திய வீரரான புவனேஸ்வர் குமார், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் மற்றும் ஜிம்பாப்வே சேர்ந்த சீன் வில்லியம்ஸ் இவர்களில் ஒருவர்தான் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீருக்கான விருதை பெறும் பட்டியலில் போட்டியில் இருக்கிறார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்த புவனேஷ்வர் குமார் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மிக சிறப்பான வகையில் பங்காற்றினார்.

bhuvi

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி புவனேஸ்வர் குமார், மொத்தமாக மூன்று போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். டி20 போட்டியிலும் விளையாடிய புவனேஸ்வர் குமார் 5 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இந்தியாவில் இந்திய ரசிகர்கள் புவனேஷ்வர் குமாருக்கு விருது கிடைக்கவேண்டும் என்று மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அணிக்கு தேவைப்படும் நேரங்களில் மிக சிறப்பாக பந்து வீசி வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தார். எனவே புவனேஷ்வர் குமாருக்கு இந்த விருது கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்படி புவனேஷ்வர் குமாருக்கு விருது கிடைத்தால் தொடர்ந்து மூன்று மாதத்தில் மூன்று விருதுகளும் இந்திய வீரர்களுக்கு கிடைத்த பெருமை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வந்தடையும்.

Advertisement