பியூஷ் சாவ்லாவை பின்னுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அசத்தல் சாதனையை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்

Bhuvi
- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியில் விளையாடிய ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு ஓவர்கள் வீசி 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதன் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

பியூஷ் சாவ்லாவை பின்னுக்கு தள்ளிய புவனேஷ்வர் குமார் :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் 41 ரன்களையும், ஸ்டப்ஸ் 34 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணியானது 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 165 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது புவனேஸ்வர் குமார் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

இந்த போட்டியில் அவர் எடுத்த மூன்று விக்கெட்டுகளின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு புவனேஷ்வர் குமார் முன்னேறியுள்ளார். ஏற்கனவே இந்த பட்டியலில் 192 போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பியூஸ் சாவ்லாவை பின்னுக்கு தள்ளியுள்ள புவனேஷ்வர் குமார் 185 போட்டிகளில் 193 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் 214 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். குறிப்பாக புவனேஸ்வர் குமார் நிகழ்த்தியுள்ள இந்த சாதனையில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு உள்ளது.

இதையும் படிங்க : கே.எல் ராகுலுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி.. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பின் – கிங் கோலி செய்த செயல்

அதாவது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஆர்.சி.பி அணியானது இந்த தொடரில் தங்களது 7 ஆவது வெற்றியை பதிவுசெய்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement