இலங்கை தொடர் முடிந்ததும் இங்கிலாந்துக்கு செல்லும் முன்னணி வீரர் – இவர் போன வெற்றி நமக்குத்தான்

IND
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மோதுவதற்கு இங்கிலாந்து சென்று இருந்தது. அந்த போட்டியில் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணிக்கெதிராக தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியின் மீது பெரும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

INDvsENG 1

- Advertisement -

இந்திய அணி ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தற்போது இங்கிலாந்தில் தங்கியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வெளியேறி உள்ளதால் தற்போது இந்திய அணிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே துவக்க வீரர் கில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அடுத்ததாக பந்துவீச்சாளர் ஆவேஸ் கான் மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக இந்திய அணிக்கு மாற்று வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்திய அணி நிர்வாகம் சார்பில் படிக்கல் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரை இங்கிலாந்துக்கு அனுப்பும் வேண்டுகோளை பிசிசிஐ நிராகரித்துள்ளது.

sundar 2

இந்நிலையில் மூன்று வீரர்கள் காயம் காரணமாக வெளியேற உள்ளதால் தற்போது நிச்சயம் சில வீரர்கள் இங்கிலாந்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படிக்கல் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இங்கிலாந்திற்கு பயணிப்பார்கள் என்று தெரிகிறது. அதிலும் குறிப்பாக புவனேஸ்வர் குமார் நிச்சயம் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டில் பலம் சேர்ப்பதற்காக அங்கு செல்வார் என்று தெரிகிறது.

Bhuvi

தற்போது துணை கேப்டனாக இலங்கை தொடருக்கான அணியில் செயல்பட்டு வரும் புவனேஸ்வர் குமார் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார். நிச்சயம் அவர் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்பார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement