பழைய பார்முக்கு திரும்பிய பவர்ஃபுல் புவி! ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தி அசத்தல் – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற 28-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்த ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக இந்த வருடம் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன்பின் நடந்த 4 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று 8 பொன்னான புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் கேப்டன் மயங்க் அகர்வால் காயத்தால் விலகிய நிலையில் ஷிகர் தவான் தலைமையேற்ற பஞ்சாப் இந்த தோல்வியால் பங்கேற்ற 6 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

PBKS vs SRH

- Advertisement -

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒரு கட்டத்தில் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பலால் 61/4 என்ற நிலைமையில் தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் லியம் லிவிங்ஸ்டன் அதிரடியாக 5 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 60 (33) ரன்கள் எடுத்து காப்பாற்றினார். ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஹைதெராபாத் வெற்றிநடை:
அதை தொடர்ந்து 152 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் வில்லியம்சன் 3 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்த ராகுல் திரிப்பாதி 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 34 (22) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 31 (25) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

SRH Nicholas Pooran

இதனால் 77/3 என 2 அணிகளின் மத்தியில் வெற்றி சமமாக நின்றபோது ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்து தங்களது அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதில் ஒருபுறம் நிக்கோலஸ் பூரன் 35* (30) ரன்கள் எடுக்க மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 41* (27) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 18.5 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்த ஹைதராபாத் அபார வெற்றி பெற்று வெற்றி நடையை தொடர்கிறது.

- Advertisement -

புவி இஸ் பேக்:
இந்த வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் சாய்த்த இளம் வீரர் உம்ரான் மாலிக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் அவருடன் கைகோர்த்து அபாரமாக பந்துவீசிய நட்சத்திர அனுபவ இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம். ஏனெனில் மொத்தம் 4 ஓவர்களை வீசிய அவர் அதில் 22 ரன்களை மட்டுமே கொடுத்து ஷிகர் தவான், லியம் லிவிங்ஸ்டன், தமிழக வீரர் சாருக் கான் ஆகிய 3 தரமான வீரர்களை அவுட் செய்தார். துல்லியமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலராக கருதப்படும் அவர் நீண்ட நாட்கள் கழித்து நேற்று வெறும் 5.50 என்ற அபாரமான எக்கனாமியில் பந்து வீசினார்.

bhuvi 1

இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக பழைய புவனேஸ்வர் குமார் இஸ் பேக் என்று சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். காரணம் பவர்பிளே ஓவர்களில் தொடங்கி கடைசி வரை அதிக ரன்களை கொடுக்காமல் ஸ்ட்ரிக்டாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்து துல்லியமாக பந்துவீசும் பவுலர் என பெயரெடுத்த அவர் கடந்த வருடங்களில் காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பிய போதிலும் பழைய புவனேஸ்வர் குமாராக அல்லாமல் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

பவர்புல் புவி:
அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட்டுகளை கூட எடுக்காமல் ரன்களை வாரி வழங்கிய காரணத்தால் அதன்பின் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு வெஸ்ட்இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் மட்டும் கடைசி முறையாக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மீண்டும் அதே பழைய ஃபார்முக்கு திரும்பி இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் முயற்சியில் கிட்டதட்ட வெற்றியை கண்டுள்ளார்.

bhuvi 2

1. முன்னதாக நேற்றைய போட்டியில் பவர்பிளே ஓவரில் சிகர் தவானை அவுட் செய்த அவர் ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. புவனேஸ்வர் குமார் : 54* விக்கெட்கள்
2. சந்தீப் சர்மா : 53 விக்கெட்கள்
3. ஜஹீர் கான் : 52 விக்கெட்கள்

இதையும் படிங்க : 18 ஆவது ஓவரை மோசமாக வீசியும் 20 ஆவது ஓவரை நான் க்றிஸ் ஜோர்டானிடம் வழங்க இதுவே காரணம் – ஜடேஜா பேட்டி

2. இத்துடன் நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற அபார சாதனை படைத்தார். 2-வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா 134 விக்கெட்களுடன் உள்ளார்.

Advertisement