- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 ஓவர் வெறும் 6 ரன்ஸ் ஹாட்ரிக்.. ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய புவனேஸ்வர்.. அசத்தல் சாதனை

சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 டி20 உள்ளூர் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 5ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற குரூப் சி பிரிவின் ஒரு ஆட்டத்தில் ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை அடுத்து களமிறங்கிய உத்திர பிரதேசம் 20 ஓவரில் போராடி 160-8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் 45 (28), பிரியம் கார்க் 31 (25) ரன்கள் எடுத்தார்கள். ஜார்கண்ட் அணிக்கு அதிகபட்சமாக பால் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 161 ரன்களை துரத்திய ஜார்க்கண்ட் அணிக்கு இஷான் கிசான் 8, உட்கர்ஸ் சிங் 1, குமார் குசக்ரா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

புவனேஸ்வர் ஹாட்ரிக்:

அதனால் 23-3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய கேப்டன் விராத் சிங் 23 (27) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அங்குள் ராய் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் பங்கஜ் கிஷோர் ஒரு ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த ராபின் மின்ஸ் 11 ரன்களில் புவனேஸ்வர் குமார் வேதத்தில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த பால் கிருஷ்ணாவை கோல்டன் டக் அவுட்டாக்கிய புவனேஸ்வர் அதற்கடுத்ததாக வந்த விவேகானந் திவாரியையும் டக் அவுட்டாக்கினார். அந்த வகையில் 16.1, 16.2, 16.3 ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் புவனேஸ்வர் குமார் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் நடப்பு சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளராகவும் சாதனை படைத்தார்.

- Advertisement -

மகிழ்ச்சி பெங்களூரு:

இறுதியில் அங்குல் ராய் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 91 (44) ரன்களில் அவுட்டானார். அதனால் 19.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஜார்க்கண்ட் அணியை ஆல் அவுட்டாக்கிய உத்திரபிரதேசம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை 1.50 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்

இதையும் படிங்க: இந்தியா – ஆஸி 2வது டெஸ்ட் நடைபெறும் அடிலெய்ட் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச், வெதர் ரிப்போர்ட்

சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவரை 2025 ஐபிஎல் தொடரில் பெங்களூரு 10.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. நடப்பு சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அவர் 8 விக்கெட்டுகளை குறைந்த எடுத்து ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -