IND vs ENG : ஒரே ஓவரில் போட்டியை மாற்றிய புவி, மீண்டும் தனது தரத்தை நிரூபித்து படைத்த சூப்பரான சாதனை இதோ

Bhuvaneswar Kumar IND vs ENg
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்று வருகிறது. அதில் ஜூலை 7-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 198/8 ரன்கள் சேர்த்தது. ஆரம்பத்திலேயே 5 பவுண்டரிகளை பறக்கவிட்ட தொடக்க வீரர் கேப்டன் ரோகித் சர்மா 24 (14) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் களமிறங்கிய இஷான் கிசான் தடுமாற்றத்துடன் 8 (10) ரன்களில் அவுட்டானார்.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

ஆனால் 3-வது இடத்தில் களமிறங்கிய தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 33 (17) ரன்களும் 4-வது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 39 (19) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அதைவிட மிடில் ஆர்டரில் நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் அடித்து முக்கியமான 51 (33) ரன்கள் எடுத்து தனது வேலையை கச்சிதமாக செய்தார். கடைசியில் அக்சர் பட்டேல் 17 (12) ரன்களும் தினேஷ் கார்த்திக் 11 (7) ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் மற்றும் மொய்ன் அலி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்தியா அபாரம்:
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் ஜோஸ் பட்லர் டக் அவுட்டாக்க டேவிட் மாலன் 21 (14) லியாம் லிவிங்ஸ்டன் 0 (3) என 2 முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் காலி செய்த ஹர்திக் பாண்டியா தடுமாறிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராயையும் 4 (16) ரன்களில் அவுட்டாக்கி மிரட்டலாக பந்துவீசினார். அதனால் 33/4 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹரி ப்ரூக் – மொய்ன் அலி ஆகியோர் 5-வது விக்கெட்டுக்கு அதிரடியாக 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்றனர்.

Hardik Pandya

அப்போது அற்புதமாக பந்துவீசிய சஹால் ஹரி ப்ரூக்கை 28 (23) ரன்களிலும் மொய்ன் அலியை 36 (20) ரன்களிலும் அடுத்தடுத்து ஓவர்களில் அவுட் செய்து போட்டி இந்தியாவின் பக்கம் மொத்தமாக திருப்பினார். இறுதியில் கிறிஸ் ஜோர்டான் 26* (17) ரன்களுடன் வெற்றிக்காக போராடினாலும் சாம் கரண் 4 (4) டைமல் மில்ஸ் 7 (8) என எதிர்ப்புறம் வந்த வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 148 ரன்களுக்குச் சுருண்டது.

- Advertisement -

மாற்றிய புவி:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதைவிட தாம் இல்லாத சமயத்தில் சமீபத்திய டெஸ்ட் தொடரில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே தக்க பதிலடி கொடுத்துள்ள கேப்டன் ரோகித் சர்மா இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளார்.

Hardik pandya IND vs ENG

இந்த வெற்றிக்கு 55 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் 199 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு அதன் நம்பிக்கை நட்சத்திர புதிய கேப்டன் ஜோஸ் பட்லரை முதல் ஓவரின் கடைசி பந்தில் க்ளீன் போல்டாக்கி கோல்டன் டக் அவுட் செய்த புவனேஸ்வர் குமார் அறிவிக்கப்படாத ஆட்ட நாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்ற அவர் கடந்த மாதம் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெறித்தனமான பேட்டிங் செய்து அடுத்தடுத்த சதங்களை விளாசி முரட்டுத்தனமான பார்மில் உள்ளார். அவர் மட்டும் இப்போட்டியில் 2 – 3 ஓவர்கள் நின்று அடித்திருந்தால் இந்தியாவின் வெற்றி கேள்விகுறியாகியிருக்கும். முதல் ஓவரிலேயே பட்லர் எனும் மலையை சாய்த்த அவரைப் பார்த்துதான் இதர இந்திய பவுலர்களும் உத்வேகமடைந்து அட்டகாசமாக பந்துவீசி வெற்றியை உறுதி செய்தனர்.

Bhuvaneshvar Kumar

சூப்பர் சாதனை:
பொதுவாகவே துல்லியமாக பந்துவீசி குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட் எடுப்பதற்கு பெயர்போன புவனேஸ்வர் குமார் நேற்றைய போட்டியில் 3 ஓவரில் 10 ரன்களை கொடுத்து வெறும் 3.33 என்ற இதர பவுலர்களை விட குறைவான எக்கனாமியில் பந்துவீசி தனது தரத்தை மீண்டும் நிரூபித்தார். அந்த வகையில் இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளே ஓவர்களில் (1 – 6) 500 டாட் பந்துகள் அதாவது ரன்கள் கொடுக்காத பந்துகளை வீசிய முதல் பவுலர் என்ற சூப்பரான சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 500*
2. டிம் சௌதீ : 455
3. நுவான் குலசேகரா : 428

இதையும் படிங்க : IND vs ENG : உலகில் எந்த கேப்டனும் செய்யாத வேற லெவல் உலகசாதனை படைத்த கேப்டன் ரோஹித் சர்மா – அபார சாதனை

அதேபோல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற டி20 போட்டிகளில் எஞ்சிய அனைத்து இந்திய பவுலர்கள் சேர்ந்து முதல் ஓவரில் 15 விக்கெட்களை எடுத்துள்ளனர். ஆனால் புவனேஸ்வர் குமார் மட்டும் தனி ஒருவனாக 13* விக்கெட்களை எடுத்து தனித்துவமாக திகழ்கிறார்.

Advertisement