IND vs ENG : உலகில் எந்த கேப்டனும் செய்யாத வேற லெவல் உலகசாதனை படைத்த கேப்டன் ரோஹித் சர்மா – அபார சாதனை

INDIA IND vs ENG Rohit Sharma
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 7-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு துவங்கியது. சௌதாம்ப்டன் நகரில் துவங்கிய அப்போட்டியில் குணமடைந்து திரும்பிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா புதிய கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 5 பவுண்டரியுடன் 24 (11) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த இசான் கிசான் 8 (10) ரன்களில் நடையை கட்டினார்.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

அடுத்ததாக களமிறங்கிய தீபக் ஹூடா 3 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு அதிரடியாக 33 (17) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 39 (19) ரன்களை அதிரடியாக குவித்து ஆட்டமிழந்தார்கள். அதனால் 126/4 என தடுமாறிய இந்தியாவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மிடில் ஓவரில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அட்டகாசமாக பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா அரைசதமடித்து 51 (33) ரன்களில் அவுட்டானார். இறுதியில் அக்சர் பட்டேல் 17 (12) ரன்களும் தினேஷ் கார்த்திக் 11 (7) ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 198/8 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக மொய்ன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அற்புதமான பவுலிங்:
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு நல்ல பார்மில் இருக்கும் கேப்டன் ஜோஸ் பட்லர் முதல் ஓவரிலேயே புவனேஸ்வர் குமார் பந்தில் கோல்டன் டக் அவுட்டானார். அதைவிட அடுத்ததாக டேவிட் மாலன் 21 (14) லியாம் லிவிங்ஸ்டன் 0 (3) ஆகிய முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்களை 5-வது ஓவரில் அனலாக பந்துவீசி காலி செய்த ஹர்திக் பாண்டியா 7-வது ஓவரில் வெறித்தனமான சிக்ஸர்களை பறக்க விடக்கூடிய லியாம் லிவிங்ஸ்டனை டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 33/4 என ஆரம்பத்திலேயே திணறிய இங்கிலாந்தை அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஹரி ப்ரூக் – மொய்ன் அலி ஆகியோர் 5 விக்கெட்டுக்கு அதிரடியாக 61 பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுக்க முயற்சித்தனர்.

Hardik pandya IND vs ENG

ஆனால் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 (20) ரன்களில் மொய்ன் அலியையும் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (23) ரன்களில் ப்ரூக்கையும் அடுத்தடுத்த ஓவர்களில் காலி செய்த சஹால் போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இறுதியில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 26* (17) ரன்களுடன் கிறிஸ் ஜோர்டான் போராடினாலும் சாம் கரண் 4 (4) டைமல் மில்ஸ் 7 (8) என எதிர்ப்புறம் வந்த வீரர்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அவுட்டானதால் 19.3 ஓவரில் 148 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது.

- Advertisement -

ரோஹித் வந்ததுமே:
இந்தியா சார்பில் சஹால், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுக்க 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் 50 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதைவிட டெஸ்ட் போட்டியில் இல்லாததால் தோல்வியை சந்தித்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா திரும்பிய முதல் போட்டியிலேயே மெகா வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடரிலும் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் தடுமாறிய இந்தியா இப்போட்டியில் அட்டகாசமாக செயல்பட்டு பெரிய வெற்றியை சுவைத்தது அவரின் கேப்டன்ஷிப் திறமைக்குச் சான்றாகும்.

Rohith

முன்னதாக கடந்த 2019 முதல் இந்தியாவின் டி20 கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா கடந்த 2020 நவம்பரிலிருந்து முழுநேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதன்பின் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தலா 3 டி20 தொடரில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பதிவு செய்தார். அதற்கு முன்பாக பகுதிநேர கேப்டனாக இருந்தபோது வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் (2019), நியூசிலாந்துக்கு எதிரான 1 போட்டி (2020) என இடையிடையே தலைமை தாங்கிய 3 போட்டிகளிலும் தோல்வியடையாமல் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

- Advertisement -

தற்போது இப்போட்டியிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்த முதல் கேப்டன் என்ற அபார உலக சாதனை படைத்துள்ளார். உலகில் வேறு எந்த கேப்டனும் 13 வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்றதில்லை. மேலும் உலகிலேயே அதிக சராசரி விகிதத்தில் வெற்றிகளை பதிவு செய்த உலக சாதனை கேப்டன்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா முதலிடம் பிடிக்கிறார்.

Rohith-1

அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 85.7% (28 போட்டிகளில் 24 வெற்றிகள்)
2. ரொமேஷ் சதீசன் (ருமேனியா) : 82.6% (19 போட்டிகளில் 15 வெற்றிகள்)
3. அஷ்கர் ஆப்கான் : 80.80% (52 போட்டிகளில் 42 வெற்றிகள்)

இதையும் படிங்க : IND vs ENG : போட்டியின் முதல் 2 ஓவர்களிலேயே அவர் எங்களை வீழ்த்தி விட்டார் – இங்கி கேப்டன் பட்லர் வருத்தம்

அதேபோல் இப்போட்டியில் அதிரடியாக 24 ரன்களை பறக்கவிட்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை குவித்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் சாதனையையும் முறியடித்தார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 29 இன்னிங்ஸ்*
2. விராட் கோலி : 30 இன்னிங்ஸ்

Advertisement