வெளியில பாக்கும்போது தான் கூல் கேப்டன். உள்ளக்குள்ள ரொம்ப பதட்டமாவே இருப்பாரு – பரத் அருண் பேட்டி

Bharath-1

நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியோடு கோலி நாடு திரும்பினார். ஆனால் அதன் பின்னர் ரஹானே தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்து நாடு திரும்பியதன் பின்னர் பலரும் ரஹானேவின் கேப்டன்சியை பாராட்டியும் இனி டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அவரையே கேப்டனாக நியமிக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Rahane

மேலும் கோலி மற்றும் ரஹானே ஆகியோரது கேப்டன்ஷிப்பை ஒப்பிட்டு பேசுவதை சமூக வலைத்தளத்தில் ஒரு பேசுபொருளாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆன பரத் அருண் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோரது கேப்டன்சி வித்தியாசம் குறித்து பேசியுள்ளார். தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது : ரஹானே மிகவும் அமைதியானவர் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் எப்போதும் அமைதியாகவே இருப்பது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் ரகானே பதற்றமாகவே இருப்பார். இருந்தாலும் அந்த பதட்டத்தை வெளியில் அவர் காட்டிக் கொள்ளமாட்டார். ஒவ்வொரு வீரரையும் ஆதரித்து பேசுவார். மிக முக்கியமாகப் பவுலர்கள் தவறு செய்யும்போது அதனை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவளித்து செல்வார்.

Rahane

ஆனால் கோலி அப்படி கிடையாது பவுலர் 2 தவறான பந்துகளை வீசி விட்டால் அவருக்கு கோபம் வந்து விடும். அது அவருடைய ஆக்ரோஷம் ஆனால் கோலியின் ஆக்ரோஷத்தை கோபம் என தவறாக புரிந்து கொள்கிறார்கள். ரகானே கோபப்பட மாட்டார் என்றாலும் முடிவுகளை சரியான வழியில் செலுத்த திட்டமிட்டு அதன்படி செய்வார் .

- Advertisement -

Rahane

அதே போன்று கோலி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினாலும் அணியின் தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில் நல்ல முடிவுகளை எடுப்பது மட்டுமின்றி அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்வதிலும் வல்லவர் என்று பதில் கூறினார். ரஹானே ஒரு அமைதியான ஒரு கேப்டன் என்றும் கோலி களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும் வெற்றியை நோக்கி பயணிக்க கூடிய ஒரு கேப்டன் என்றும் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.