- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி மாதிரி பும்ராவும் நிறைய தியாகம் பண்ணியிருக்காரு.. அதனால் தான் அவர் இன்னைக்கு நம்பர் 1 – பரத் அருண் பேட்டி

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 48 டெஸ்ட் போட்டிகள், 89 ஒருநாள் போட்டிகள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 145 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். உலகில் நம்பர் 1 வேகப்பந்து பந்துவீச்சாளராக திகழும் அவர் :

ஜஸ்ப்ரீத் பும்ரா நிறைய தியாகம் செய்துள்ளார் : பரத் அருண்

தற்போது 31 வயதினை எட்டியுள்ள வேளையில் பணிச்சுமை காரணமாக அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டு முக்கிய போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் இன்றளவும் உலகின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அதோடு எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இடம்பிடித்துள்ள அவர் தனது கிரிக்கெட் கரியரில் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்க என்னென்ன தியாகங்கள் செய்தார்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

பும்ராவை நாங்கள் ஆரம்பத்தில் பார்க்கும்போது அவர் மிகவும் வேகமாக பந்துவீசும் ஒரு பவுலராக இருந்தார். அதோடு அவரது வித்தியாசமான பௌலிங் ஸ்டைல் அவருக்கு கூடுதல் வேகத்தில் பந்துவீச உதவியது. அதனால் நாங்கள் அவருடைய பௌலிங் ஆக்சனை மாற்ற விரும்பவில்லை. அதேவேளையில் அவருடைய டயட் மற்றும் பிட்னஸில் கவனம் செலுத்த அறிவுறுத்தினோம்.

- Advertisement -

அவரும் தன்னுடைய உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்ள சம்மதித்தார். அந்த வகையில் விராட் கோலி போன்று ஜஸ்ப்ரீத் பும்ராவும் தனது உணவு பழக்க வழக்கங்களில் பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். அதிலும் குறிப்பாக அவருக்கு பிடித்த பர்கர், பீட்சா, மில்க் ஷேக் ஆகியவற்றை கடந்த பல ஆண்டுகளாக அறவே தவிர்த்து விட்டார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரின் எல்லா போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்.. காரணத்தை கூறிய – ஏ.பி.டி

அவருடைய சரியான டயட்டும், உடற்பயிற்சியுமே தற்போது உலகின் நம்பர் ஒன் பவுலராக அவரை மாற்றியுள்ளது. ஒரு வேகப்பந்து வீச்சாளராக இத்தனை ஆண்டு காலம் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. அதிலும் குறிப்பாக காயத்திலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அவர் உடனடியாக தனது ரிதத்தை பிடிப்பது அசாத்தியமானது என்று பரத் அருண் கூறியுள்ளார்.

- Advertisement -