- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரோட பிரச்சனை பத்தி தெரியாம தப்பா பேசாதீங்க.. ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஆதரவு தெரிவித்த – பரத் அருண்

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். ஆனால் முக்கியமான இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் 5 போட்டிகளிலும் விளையாடியிருக்க வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

பும்ரா பத்தி தெரியாம பேசாதீங்க : பரத் அருண் கருத்து

ஏனெனில் இங்கிலாந்து மைதானத்தில் இந்திய அணி ஜெயிக்க பும்ராவின் பந்துவீச்சு முக்கியம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் ஏற்கனவே இந்திய அணியின் நிர்வாகம் அறிவித்திருந்த படி பும்ரா பணிச்சுமை காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதிலும் பும்ராவே அந்த மூன்று போட்டிகளையும் முடிவு செய்து விளையாடியிருந்தார்.

- Advertisement -

இப்படி பும்ரா இந்தத் தொடர் முழுவதும் விளையாடாமல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெருமளவில் விவாதம் செய்யப்பட்ட விடயமாக மாறியது. அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்றும் பனிச்சுமையை காரணம் காட்டி குறைந்த போட்டிகளில் விளையாடக்கூடாது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பும்ராவை நோக்கி எழுப்பப்பட்டன.

ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் பும்ராவிற்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ராவுக்கு எதிராக வரும் கருத்துக்களை கேட்க வருத்தமாக உள்ளது. ஏனெனில் முதுகுப் பகுதியில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்பு அவர் தற்போது விளையாடி வருவதே மிகப்பெரிய விடயம்.

- Advertisement -

அவருடைய காயம் என்பது சிறிய விடயம் அல்ல, மிகவும் தீவிரமான ஒன்று. ஒருவேளை அவர் தனது உடலை வருத்தி அதிக அழுத்தத்தை கொடுத்தால் அவரது கரியரே முடியும் அபாயம் கூட உள்ளது. குறிப்பிட்ட போட்டிகளை தேர்வு செய்து விளையாடுகிறார் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அது அப்படி கிடையாது.

இதையும் படிங்க : 8 மணி மேட்சுக்கு 5 மணிக்கு தான் எழுந்து வருவாரு.. ஹெட்மயரின் வித்தியாசமான குணம் பற்றி கூறிய – சஞ்சு சாம்சன்

அவருடைய உடல் எதற்கு ஒத்துழைக்கிறதோ அதற்கு ஏற்றார்போல் தான் அவர் செயல்படுகிறார். எனவே அவரது உடற்தகுதியையும், காயத்தையும் குறித்து தெரியாமல் யாரும் இப்படி பேசக்கூடாது. அவர் நலமுடன் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவருடைய உடல் எப்படி ஒத்துழைக்கிறது என அவருக்கு மட்டுமே தெரியும் என பரத் அருண் அவருக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -