அவரே ஆசைப்பட்டாலும் அதெல்லாம் வேலைக்காகாது. பும்ராவின் ஆசை நிறைவேறாது – பரத் அருண் பேட்டி

Bharat-Arun
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை தொடருடன் தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து அவரது கேப்டன் பதிவை வலுக்கட்டாயமாக பிசிசிஐ நீக்க இதன் காரணமாக வருத்தத்தில் இருந்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறினார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி வெளியேறினார்.

kohli

- Advertisement -

இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருப்பதால் டெஸ்ட் போட்டிகளில் அவரை கேப்டனாக நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பதவியை ஏற்கும் வரிசையில் மூன்று வீரர்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் கே.எல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா ஆகிய மூன்று பேருமே கேப்டன்ஷிப் போட்டிக்கான களத்தில் உள்ளனர். ஏற்கனவே ராகுல், விராட் கோலிக்கு பதிலாக ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் அணியின் கேப்டனாக தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதை கவுரமாக ஏற்று அணியை சிறப்பாக வழி நடத்துவேன் என்று வெளிப்படையாக தனது ஆசையை கூறியிருந்தார்.

Bumrah

இந்நிலையில் பும்ராவின் இந்த ஆசை நிறைவேறாது என்று இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒரு வேகப்பந்து வீச்சாளரால் அணியை சரியாக வழிநடத்த முடியாது. அது சரியான தேர்வாகவும் இருக்காது என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில் : பும்ரா கேப்டனாகும் தகுதி உடையவர்தான். ஆனால் கேப்டன் பொறுப்பை வழங்கினால் மூன்றுவித பார்மேட்களிலும் அவரால் விளையாட முடியுமா என்பது சந்தேகம்தான்.

- Advertisement -

ஏனெனில் ஒரு கேப்டன் எப்போதுமே போட்டியில் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் அது மட்டுமின்றி ஒவ்வொரு தொடருக்கும் இடையிலும் அவர்களுக்கு ஓய்வு வேண்டும். ஒரு வேகப்பந்து வீச்சாளரை கேப்டனாக நியமித்தால் நிச்சயம் அவர்களுக்கு அந்த ஓய்வு கிடைக்காது. மேலும் மூன்று விதமான போட்டிகளிலும் அவர்களால் தொடர்ந்து விளையாட முடியுமா என்பதையும் உறுதியாகக் கூற முடியாது.

இதையும் படிங்க : என்னுடைய இந்த லிஸ்ட்ல விராட் கோலிக்கு என்னைக்குமே இடமில்லை – சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சை

எனவே நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாக மாற முடியாது என்னை பொறுத்தவரை ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேரில் ஒருவர் இந்திய அணியை வழிநடத்த நல்ல வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர்கள் மூவருக்குமே கேப்டன்ஷிப் தகுதி உள்ளது. ஒரு பேட்ஸ்மேனை தான் நான் கேப்டனாக பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் எந்தவித ஓய்வும் இன்றி மூன்றுவித கிரிக்கெட்டிலும் விளையாட முடியும் என்று பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement