முகமது சிராஜால் நிச்சயம் இங்கிலாந்தில் அதை செய்ய முடியும்.. அவருக்கு டேலன்ட் இருக்கு – பரத் அருண் கருத்து

Bharat Arun and Siraj
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோர் இல்லாமல் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது. அதன் காரணமாக இந்த தொடரில் இருந்து இந்திய அணி வெற்றியுடன் துவங்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இங்கிலாந்தில் முகமது சிராஜ் சிறப்பாக செயல்படுவார் : பரத் அருண்

அதேவேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு இந்த இங்கிலாந்து தொடர் மிகவும் சவாலான தொடர் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் இங்கிலாந்து ஆடுகளங்களில் பொதுவாகவே கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணி தடுமாறி வந்துள்ளதை நாம் கண்டுள்ளோம். அதனால் எதிர்வரும் இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போதைய இந்திய அணியில் உள்ள பௌலிங் யூனிட்டை வைத்து இங்கிலாந்து அணியை எதிர்க்க முடியும் என்று பலரும் பேசிவரும் வேளையில் இங்கிலாந்தில் உள்ள சூழ்நிலைகளில் பயன்படுத்தி முகமது சிராஜால் நல்ல பங்களிப்பை வழங்க முடியும் என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

முகமது சிராஜால் இங்கிலாந்து ஆடுகளங்களில் உள்ள தன்மையை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதிலும் குறிப்பாக இடது கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக அவரால் மிகச் சிறப்பாக பந்துவீச முடியும் என்று நினைக்கிறேன். 2021-இல் அவர் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதேபோன்று இம்முறையும் அவர் சிறப்பாக செயல்படுவார் அதிலும் குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் அவரது பந்துவீச்சு அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

ஏனெனில் அந்த மைதானம் அவருடைய பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம் எனவேதான் சொல்கிறேன் நிச்சயம் இங்கிலாந்து மண்ணில் முகமது சிராஜ் சிறப்பாக செயல்படுவார். இங்குள்ள சூழ்நிலைகளை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படும் திறனும் அவரிடம் இருக்கிறது. இந்த தொடரில் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக வீழ்த்தப்போகும் பந்துவீச்சாளர்களில் சிராஜூம் முக்கியமானவர்.

இதையும் படிங்க : பும்ரா கிடையாது.. இங்கிலாந்து தொடரில் அசத்தப்போகும் இந்திய பவுலர் இவர்தான் – மேத்யூ ஹைடன் கணிப்பு

அதேபோன்று அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். பந்தினை இருபுறம் ஸ்விங் செய்யும் அவர் இங்கிலாந்திலும் ஏற்கனவே டியூக் பந்துகளை வைத்து கவுன்டி போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் உடையவர். அவருக்கு ஒருவேளை இந்த தொடரில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தால் அவரது அனுபவம் இங்கு சிறப்பாக பந்துவீச உதவும் என பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement