இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இங்கிலாந்து சென்றடைந்த வேளையில் தற்போது முதன்மை இந்திய அணியானது அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இங்கிலாந்து தொடரில் அசத்தப்போகும் பவுலர் இவர்தான் : மேத்யூ ஹைடன்
அதேவேளையில் இந்திய ஏ அணியும் பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு மிக சவாலான தொடராக மாறியுள்ள வேளையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடப்போகும் வீரர்கள் குறித்த சில கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் பவுலர் குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவை காட்டிலும் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சவால் வாய்ந்த தொடர் என்பது உண்மைதான். இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.
ஏனெனில் அவரிடம் நல்ல கன்சிஸ்டென்சி இருக்கிறது. அதனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்குறேன். மேலும் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அவரால் இந்த தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதோடு இந்த தொடரில் அவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றும் நினைக்கிறேன்.
இதையும் படிங்க : சச்சினின் இந்த சாதனையை நிச்சயமாக வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார் – ராபின் உத்தப்பா ஓபன்டாக்
அதுமட்டும் இன்றி தற்போது அஸ்வினை தாண்டி இந்திய அணி புதிய அத்தியாயத்திற்கு சென்றுள்ளதால் அவரால் இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஹைடன் கூறியுள்ளார். அவர் கூறியது போன்றே தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகு குல்தீப் யாதவ் தான் ரவீந்திர ஜடேஜாவிற்கு அடுத்து முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.



