சச்சினின் இந்த சாதனையை நிச்சயமாக வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார் – ராபின் உத்தப்பா ஓபன்டாக்

Uthappa and Suryavanshi
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அந்த அணிக்காக அறிமுகமானார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் நிகழ்த்தியிருந்தார்.

சச்சினின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடிப்பார் : ராபின் உத்தப்பா

அதேபோன்று தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூருக்கு எதிராக சிக்ஸருடன் தனது கரியரை துவங்கிய வைபவ் சூர்யவன்ஷி அதன் பிறகு குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது 35 பந்துகளில் சதம் அடித்து மிக இளம் வயதில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

- Advertisement -

அதன் பின்னர் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த அவர் இந்த 2025 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 1 அரைசதம் என 36 ரன்கள் சராசரியுடன் 252 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக இந்த தொடரில் 18 பவுண்டரிகளை மட்டுமே அடித்த அவர் 24 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு தேர்வாவார் என்றும் அதுமட்டுமின்றி சச்சின் ஒரு முக்கிய சாதனையையும் அவர் தகர்ப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரின் போது பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் நிச்சயம் அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான போட்டியில் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷி நிச்சயம் அடுத்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாவார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா, விராட் கோலி போன பிறகு சுப்மன் கில்லை வச்சு எடுத்த இந்த முடிவு நல்லதுதான் – மைக்கல் வாகன் கருத்து

சச்சின் டெண்டுல்கர் தனது 16 வது வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்த வேளையில் நிச்சயம் அதனை தகர்க்கப்போகும் வீர்ராக நான் அவரை பார்க்கிறேன். வைபவ் சூரியவன்ஷி 15 வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது என்றும் இந்திய அணியில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement