ரோஹித் சர்மா, விராட் கோலி போன பிறகு சுப்மன் கில்லை வச்சு எடுத்த இந்த முடிவு நல்லதுதான் – மைக்கல் வாகன் கருத்து

Michael Vaughan
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் அடுத்த அத்தியாயத்தை நோக்கி தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி பயணிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் அடுத்த டெஸ்ட் பயணத்தின் முதல் படியாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமையின் கீழ் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

சுப்மன் கில்லை வச்சு எடுத்த இந்த முடிவு சரிதான் : மைக்கல் வாகன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

மேலும் இந்த தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் வெளியேறியதை தொடர்ந்து புதிய கேப்டனாக சுப்மன் கில் கொண்டு வரப்பட்டது தைரியமான ஒரு முடிவு என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் அவரை கேப்டனாக தேர்வு செய்தது ஒரு தைரியமான முடிவு என்று கூறுவேன்.

- Advertisement -

ஒரு இளம் வீரர் ரோகித், கோலி போன்ற ஜாம்பவான்கள் சென்ற பிறகு தலைமை ஏற்று வழிநடத்த இருப்பது சவால் தான் என்றாலும் இதுபோன்ற ஒரு பெரிய தருணத்தை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். சுப்மன் கில்லிடம் நிச்சயம் அதற்கான திறமை இருக்கிறது. அதே போன்று ரிஷப் பண்ட் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர்தான்.. 23 வயது வீரரை கைகாட்டிய – மான்டி பனேசர்

இது அடுத்த வருங்காலத்தின் துவக்கம் என்று நினைக்கிறேன். இந்த இளம் வீரர்கள் இம்முறை இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என மைக்கல் வாகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement