- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த சீசனில் மட்டும் இந்தியாவுக்காக ஐபிஎல்லை.. கமின்ஸ், ஸ்டார்க் மாதிரி பும்ரா தியாகம் பண்ணனும்.. பரத் அருண்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ளார். அதை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். ஆனால் அதே தனித்துவமான பவுலிங் ஆக்சன் அதிகமான விளையாடினால் அவருக்கு காயத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது.

குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முழுமையாக 5 போட்டிகளில் விளையாடிய அவர் 32 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். அதனாலேயே கடைசிப் போட்டியில் காயமடைந்த பும்ரா முதுகில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையால் இங்கிலாந்தில் தம்மால் 5 போட்டிகளில் விளையாட முடியாது என்று ஆரம்பத்திலேயே அறிவித்தார். துரதிஷ்டவசமாக அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி காணவில்லை.

- Advertisement -

கமின்ஸ், ஸ்டார்க் மாதிரி:

அதனால் இதற்கு முன் பெற்றுக் கொடுத்து வெற்றிகளை மறந்த சில முன்னாள் இந்திய வீரர்கள், ஒன்று முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வு பெறுங்கள் என்று பும்ராவை சொல்லாத குறையாக விமர்சித்தனர். இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் நடைபெறும் சீசனில் மட்டும் ஜஸ்ப்ரித் பும்ரா ஐபிஎல் தொடரை தியாகம் செய்ய வேண்டுமென முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கடந்த காலங்களில் ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ் ஆகியோர் ஆஷஸ் போன்ற முக்கிய தொடரில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்தனர். அதனால் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியாக தயாரான அவர்கள் நாட்டுக்காக டெஸ்ட் தொடரில் விளையாடி வெற்றிகளில் பங்காற்றினர். அதே போன்ற அணுகுமுறையை ஜஸ்ப்ரித் பும்ரா பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளும் அருண் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஐபிஎல் தியாகம் பண்ணுங்க:

“கண்டிப்பாக அந்த அணுகுமுறை உதவி செய்யும். குறிப்பாக அது உங்களுடைய பவுலர்களை நீங்கள் பாதுகாக்க விரும்பும் சமயங்களில் உதவும். பேட்ஸ்மேன்கள் அல்லது ஸ்பின்னர்கள் ஆல் ஃபார்மட்டில் விளையாடுவது பரவாயில்லை. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் அதிகப்படியான கிரிக்கெட்டில் விளையாடினால் உடலை மீட்டெடுப்பதற்கான போதுமான நேரம் கிடைக்காது”

இதையும் படிங்க: எந்த ப்ராபலமும் இல்ல.. ஐ அம் ரெடி.. உடற்தகுதி தேர்வு வெற்றிகரமாக முடித்த பும்ரா – வெளியான தகவல்

“ஜஸ்ப்ரித் பும்ரா அல்லது வேறு ஏதேனும் பவுலர் ஒரு குறிப்பிட்ட தொடருக்காக முக்கியம் என்று நாம் கருத்தினால், அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம். மேலும் அவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அந்த வீரர் ஒப்பந்தத்தில் இருந்தால் சரியான இழப்பீடு வழங்குகிறோம் என்று பிசிசிஐ சொல்ல வேண்டும். ஏனெனில் இந்திய அணிக்காக விளையாடும் ஒப்பந்தத்தில் இருக்கும் அவரை எம்மாதிரியாக பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். அது நியாயமானது என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -