- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சதமடித்தும் தோற்ற போது.. கிங் கோலி சொன்ன வார்த்தை தான் 2018இல் ஆஸியில் ஜெய்க்க காரணம்.. பரத் அருண்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கருக்குப் பின் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விளையாடி வந்த அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை எடுத்துள்ளார். 30 சதங்களும் அடித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய பெருமைக்குரியவர்.

மேலும் 2014இல் தோனி விடை பெற்ற போது ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் இந்தியா 7வது இடத்தில் திண்டாடிக் கொண்டிருந்தது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தம்முடைய ஆக்ரோஷமான அணுகுமுறையால் அபாரமாக வழி நடத்தி 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வெற்றி:

மொத்தம் 68 போட்டிகளில் இந்தியாவை தலைமைத் தாங்கிய விராட் கோலி 40 வெற்றிகளைப் பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் 2018/19 ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி சதத்தை அடித்தும் இந்தியா தோற்றது. அப்போது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த போட்டியில் எப்படியாவது ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டுமென்று இந்திய வீரர்களிடம் விராட் கோலி சொன்னதாக பரத் அருண் கூறியுள்ளார்.

அந்த வார்த்தைகள் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவுக்கு வெற்றியைக் கொடுத்து கடைசியில் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றியைப் பெற உதவியதாகவும் பரத் அருண் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பெர்த் மைதானத்தில் விராட் கோலி அபாரமான சதத்தை அடித்தார்”

- Advertisement -

வெற்றிகரமான கேப்டன்:

“அதையும் தாண்டி நாங்கள் அந்தப் போட்டியில் வெற்றி பெறவில்லை. மெல்போர்ன் மைதானத்திற்கு செல்லும் முன் விராட் கோலி இந்திய அணியின் மனநிலையை முற்றிலும் மாற்றினார். அவர் ஒவ்வொரு இந்திய வீரர்களையும் நம்மால் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும் என்று நம்ப வைத்தார். ஒரு கேப்டனாக நிகரற்ற முறையில் தனது வேலையைச் செய்தார்”

இதையும் படிங்க: 2012 மாதிரி அந்த 3 தோல்விக்கு காரணமான ரோஹித், கோலி போகட்டும் விடுங்க.. புதிய இந்தியாவை வாழ்த்திய மஞ்ரேக்கர்

“இந்திய அணியில் அவர் மற்ற அனைவரைக் காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் மதித்தார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மிஸ் செய்யப்படுவார். இந்தியா மற்றும் உலக டெஸ்ட் கிரிக்கெட் அவரைப் போன்ற குணத்தைக் கொண்ட வரை மிஸ் செய்யும். இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளராக கேப்டன் விராட் கோலியுடன் நானும் எனது சில சிறந்த தருணங்களைக் கொண்டுள்ளேன்” எனக் கூறினார்.

- Advertisement -