மெக்கல்லத்தை மிஞ்சிய முரட்டு அடி, சூர்யகுமாரை தடுக்க அதுவே ஒரே வழி – பாராட்டுடன் பவுலர்களுக்கு ராஸ் டெய்லர் கொடுத்த டிப்ஸ்

Ross taylor suryakumar yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ஏமாற்றத்தை சந்தித்த பின் நியூசிலாந்து பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் நிலையில் மௌன்ட் மௌங்கனி நகரில் நடைபெற்றது. முன்னதாக 2வது போட்டியில் பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் அதிரடியான சதமடித்து 111* (51) ரன்களை விளாசி இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

Suryakumar-Yadav

- Advertisement -

தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கும் அவர் குறுகிய காலத்திலேயே ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அதை விட களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் லாவகமாக மைதானத்தின் நாலாபுறங்களிலும் சுழன்றடித்து வியக்க வைக்கும் அவரை நிறைய முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் ரசிகர்களும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று வெளிப்படையாகவே கொண்டாடி வருகிறார்கள்.

முரட்டு அடி, ஒரே வழி:

குறிப்பாக வீடியோ கேம் விளையாட்டில் வருவது போல கற்பனைக்கு எட்டாத வகையில் சூரியகுமார் பேட்டிங் செய்வதாக இந்தியாவின் விராட் கோலி வெளிப்படையாக பாராட்டினார். அதிலும் நின்ற இடத்தில் இருந்தே விக்கெட் கீப்பருக்கு தலைக்கு மேலும் பின்புறத்திலும் அவர் அடிக்கும் ஷாட்கள் எதிரணியினரை கூட வியந்து பாராட்ட வைத்து வருகிறது. அந்த வரிசையில் இணைந்துள்ள நியூசிலாந்து ஜாம்பவான் ராஸ் டெய்லர் தங்களது நாட்டில் ப்ரெண்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்தில் ஆகியோர் அடித்த சதங்களை விட மௌன்ட் மௌங்கனியில் நடைபெற்ற 2வது போட்டியில் சூரியகுமார் அடித்த சதம் அற்புதமானது என்று பாராட்டியுள்ளார்.

Suryakumar Yadav.jpeg

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது ஒரு நம்ப முடியாத இன்னிங்ஸ். அதை அவர் விளையாட துவங்கிய விதமும் மைதானத்தில் இருந்த இடைவேளைகளை கண்டறிந்து அடித்த விதமும் அற்புதமாக இருந்தது. நியூசிலாந்து மண்ணில் இதற்கு முன் பிரெண்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்தில், கோலின் முன்ரோ ஆகியோர் அடித்த நிறைய நல்ல இன்னிங்ஸ்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் சூரியகுமார் அடித்த இந்த சதம் நியூசிலாந்து மண்ணில் டி20 கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட சதங்களில் மிகவும் சிறந்ததாகும்”

- Advertisement -

“அவர் போட்டியை கணக்கிட்டு ரிஸ்க் எடுத்து அடிக்கிறார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக இன்சைட்-அவுட் ஷாட் மிகவும் ரிஸ்க்கானது. மேலும் லாக்கி பெர்குசனை சிக்ஸர் பறக்க விட்டதில் அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது என்று நினைக்கிறேன். அப்போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் உள்வட்டத்திற்குள் இருந்தததை பயன்படுத்தி அவர் மேலே தூக்கி அடித்து அசத்தினார். இருப்பினும் இன்னும் அவர் கற்றுக் கொள்வதற்கு நிறைய நுணுக்கங்கள் உள்ளது. அதே சமயம் தற்போதே அவர் சிறந்த ஷாட்டுகளை விளையாடி வருகிறார்” என்று கூறினார்.

Taylor

மேலும் எப்படி போட்டாலும் அடிப்பேன் என்ற வகையில் விளையாடி வரும் சூரியகுமாருக்கு எதிராக பந்து வீசுவதை விட எதிர்ப்புறம் இருக்கும் இந்திய பேட்ஸ்மேனுக்கு பந்து வீச முயற்சிப்பதே அவரை நிறுத்துவதற்கான வழி என்று கலகலப்புடன் ராஸ் டெய்லர் கூறினார். இருப்பினும் அவரும் மனிதர் என்பதால் அவர் செய்யும் தவறுகளை பயன்படுத்தி அவரை அவுட்டாக்க முயற்சிக்குமாறு பவுலர்களுக்கு டெய்லர் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு. “முடிந்தவரை எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு பந்து வீச முயற்சிகள். இருப்பினும் அவரும் மனிதர் என்பதால் அவரும் சில தவறுகளை செய்துவார்”

“அந்த வகையில் 50 – 50 சதவீதம் உங்களுக்கு வாய்ப்பு இருப்பதால் அதை பயன்படுத்தி பந்து வீசுங்கள். ஆனால் தற்சமயத்தில் அவர் அடிக்கும் சிக்ஸர்கள் மெல்போர்ன் மைதானத்திலேயே 10 – 15 நாற்காலி வரிசைகள் தாண்டிச் சென்று விழும். அதுவே 3வது போட்டி நடைபெறும் மெக்லீன் பார்க் மைதானத்தில் அவர் அடித்தால் பந்து மொத்தமாக வெளியே சென்று விடும்” என்று கூறினார்.

Advertisement