
இந்தியாவில் தற்போது உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி போட்டிகள் நடைபெற்ற வருகின்றன. இந்த தொடருக்காக நான்கு அணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதில் இந்திய அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைத்து வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக இந்த துலீப் டிராபி தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த துலீப் டிராபி தொடரானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் பெங்களூரு மண்ணின் மைந்தனான கே.எல் ராகுல் பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் செய்த ஒரு சம்பவத்தால் கே.எல் ராகுல் மகிழ்ச்சியில் வாய் அடைத்துப்போன சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி ஆகிய அணிகள் மோதிய போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இருந்த கே.எல் ராகுல் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார்.
அப்படி அவர் பேட்டிங் செய்ய வரும்போது சின்னசாமி ரசிகர்கள் அங்கிருந்து அவரது பெயரை சத்தமாக கோஷமிட்டு ஆதரவு கொடுத்தனர். அதோடு ஒரு படி மேலே சென்று “ஆர்.சி.பி அணியின் கேப்டன் கே.எல் ராகுல்” என தொடர்ச்சியாக அவரது பெயரை ஆர்சிபி அணியின் கேப்டனாக கூறி கோஷம் எழுப்பினர்.
இதன் காரணமாக கே.எல் ராகுல் நெகிழ்ச்சி அடைந்தார். ஏற்கனவே லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் அவர் அந்த அணியின் உரிமையாளருடன் மனஸ்தாபத்தில் இருப்பதினால் அடுத்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக அவர் லக்னோ அணியில் இருந்து வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதையும் படிங்க : 236 ரன்ஸ்.. மாணவ் சுதர் மேஜிக்.. எங்களாலையும் முடியும்.. ஸ்ரேயாஸ் அணியை பந்தாடிய ருதுராஜ் அணி
அதோடு சொந்த மண்ணில் வீரர் தங்களது அணிக்கு கேப்டனாக வரும்போது அது மிகப்பெரிய உத்வேகத்தை பெங்களூரு அணிக்கு அளிக்கும் என்பதால் கே.எல் ராகுல் பெங்களூர் அணியின் கேப்டனானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூரு அணியில் விளையாடி இருந்த கே.எல் ராகுல் சமீப காலமாகவே மற்ற அணிகளுக்கு கேப்டன்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.