மேற்குவங்க அணியின் கேப்டனுக்கு கொரோனா உறுதி. தனிமைப்படுத்தி மேற்கொள்ளப்படும் சிகிச்சை – விவரம் இதோ

Abhimanyu-Easwaran

கடந்த மார்ச் மாதம் முதல் உலகெங்கும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 13 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மக்கள் இயல்பு நிலையை இழந்து பெரும் அச்சத்தில் இருந்தனர். தற்போது பாதிப்பின் தீவிரம் படிப்படியாக குறைந்து வருகிறது.

Corona-1

இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் நடைபெற ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணியை சேர்ந்த கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் பெங்கால் டி20 சேலஞ்சர்ஸ் தொடரில் விளையாட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 25 வயதான அபிமன்யு ஈஸ்வரன் இரண்டு வாரங்களுக்கு தனிமைப் படுத்தப் பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி துவங்கும் பெங்கால் டி20 சேலஞ்சர்ஸ் தொடரில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

abhimanyu easwaran 2

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கொரோனோ பரிசோதனையும் மேற்கொண்டார். அந்த பரிசோதனையின் பேரிலேயே அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இருப்பினும் அவருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும் அவர் இப்போது தனிமைப்படுத்த பெற்றுள்ளார்.

- Advertisement -

abhimanyu easwaran 1

மேலும் அவருக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்க மருத்துவக் குழுவின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாகியதும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஒரு அதிர்ச்சி செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.