மழையால் தப்பிச்சிங்க.. ஆஸ்திரேலிய அணியை ஓப்பனாக கிண்டலடித்த பென் ஸ்டோக்ஸ்.. காரணம் என்ன

Ben Stokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியில் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த தொடரை சமன் செய்தது.

அந்த நிலையில் அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி மான்செஸ்டரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்றது. இருப்பினும் மான்செஸ்டர் நகரில் பலத்த மழை பெய்ததால் அப்போட்டி டாஸ் கூட வீசப்படாமல் மொத்தமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டி நடைபெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

- Advertisement -

கலாய்த்த பென் ஸ்டோக்ஸ்:

அதனால் 1 – 1 (3) என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்ததால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவை கலாய்த்துள்ளார். குறிப்பாக கடைசிப் போட்டியில் மழை வந்ததால் ஆஸ்திரேலியா தப்பித்ததாகவும் இல்லையேல் இங்கிலாந்து வென்றிருக்கும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மான்செஸ்டரில் மழை. இங்கே ஆஸ்திரேலியா அதிர்ஷ்டம் செய்துள்ளது என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். குறிப்பாக மான்செஸ்டர் மைதானம் மழையால் மூடப்பட்டிருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் தெரியும் புகைப்படம் எடுத்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு சிரிக்கும் ஸ்மைலியுடன் பென் ஸ்டோக்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ஒருநாள் தொடர்:

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டதால் விளையாட மாட்டார். அதே போல தற்போதைய கேப்டன் ஜோஸ் பட்லர் காயத்தால் அத்தொடரில் விளையாடவில்லை.

இதையும் படிங்க: விராட் கோலி டீம் ஜெயிச்சுது.. சென்னை வெயிலுக்கு தகுந்த இந்திய அணியின் பயிற்சியை பகிர்ந்த கோச் திலிப்

எனவே இளம் வீரர் ஹரி ப்ரூக் தற்காலிகமாக அந்தத் தொடரில் இங்கிலாந்தின் கேப்டனாக செயல்பட உள்ளார். மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் கலாய்த்ததால் கடுப்பாகியுள்ள ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட்டில் தவற விட்ட வெற்றியை ஒருநாள் தொடரில் பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. அதனால் அந்தத் தொடரில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement