விராட் கோலி டீம் ஜெயிச்சுது.. சென்னை வெயிலுக்கு தகுந்த இந்திய அணியின் பயிற்சியை பகிர்ந்த கோச் திலிப்

T Dillip
- Advertisement -

வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் துவங்குகிறது. அதில் வெற்றி பெறுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் சென்னையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அந்தப் பயிற்சியில் செப்டம்பர் 16ஆம் தேதி இந்திய அணியினர் இரண்டாகப் பிரிந்து 2 அணிகளாக விளையாடியதாக பவுலிங் பயிற்சியாளர் டி திலிப் தெரிவித்துள்ளார். அதில் ஒரு அணிக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பயிற்சி போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றதாகவும் திலிப் கூறியுள்ளார்.

- Advertisement -

வித்தியாச பயிற்சி போட்டி:

இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “அனைத்து வீரர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே இன்றைய பயிற்சியில் யோசனையாகும். எங்களிடம் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு போட்டி சென்னையில் நிலவும் ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு நடைபெற்றது. அதற்கு தகுந்தார் போல் நாங்கள் 2 பிரிவாக எங்களுடைய அணியை பிரித்து விளையாடினோம்”

“அந்த அணிகள் கேட்ச் பிடிப்பது போன்ற சிறிய போட்டிகளில் விளையாடியது. அதில் குறைவான தவறுகளை செய்யும் அணிகள் வெற்றி பெறுவதாக வைத்துக் கொண்டோம். அந்த வகையில் விராட் கோலியின் அணி வெற்றி பெற்றது. அதன் பின் நாங்கள் பவுலர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் கொண்ட குழுவை இரண்டாகப் பிரித்து விளையாடினோம்”

- Advertisement -

விராட் கோலி அணி வெற்றி:

“அந்தப் பயிற்சியில் உள்வட்டத்திற்கும் வெளிவட்டத்திற்கும் இடையே கேட்ச் பிடிப்பது, களத்தில் அட்டாக் ஃபீல்டிங் செய்வது போன்றவற்றை செய்தோம். அதே போல ஸ்லிப் பகுதியில் கேட்ச் பிடிப்பது, ஷார்ட் லெக் சில்லி பாய்ண்ட் இடங்களில் கேட்ச் பிடிப்பது போன்ற பயிற்சிகளை செய்தோம். மொத்தமாக எங்களுடைய பயிற்சி மிகவும் நன்றாக இருந்தது”

இதையும் படிங்க: மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

“சென்னையில் நிலவும் சூழ்நிலைகளில் சூடான சூரியனுக்கு கீழ் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகளை செய்தோம். அதே சமயம் சூழ்நிலை மற்றும் வானிலை ஆகியவற்றைத் தாண்டி இந்த அணி எப்போதுமே நன்றாக செயல்படக்கூடிய பயிற்சிகளை எடுத்து வருகிறது” என்று கூறினார். அந்த வகையில் முழுமையான பயிற்சிகளை எடுத்துள்ள இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடிக்க தயாராகியுள்ளது.

Advertisement