இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்தை வீழ்த்த இதை விட நல்ல சான்ஸ் கிடைக்குமா? இலங்கைக்கு அடித்த அதிர்ஷ்டம்

ENG vs SL
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 27 வருடங்கள் கழித்து இலங்கை வெற்றி பெற்றது. இத்தனைக்கும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடுவதற்கு கூட தகுதி பெறாத இலங்கை ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை தோற்கடித்தது. அந்த வெற்றி இலங்கை ரசிகர்களிடம் மிகப்பெரிய புத்துணர்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. அதில் விளையாடுவதற்காக இலங்கை அணியினர் இங்கிலாந்துக்கு சென்று பயிற்சிகளை துவங்கியுள்ளனர்.

- Advertisement -

இங்கிலாந்துக்கு பின்னடைவு:
இந்நிலையில் இங்கிலாந்தில் 100 பந்துகளைக் கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் காயமடைந்து வெளியேறினார். அதே காரணத்தால் இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் அவர் முழுமையாக விலகியுள்ளதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.

இது இங்கிலாந்து அணிக்கு பாதகமாகவும் இலங்கை அதிர்ஷ்டமாகவும் அமைந்துள்ளது என்று சொல்லலாம். ஏனெனில் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மகத்தான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக கருதப்படுகிறார். அத்துடன் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் புதிய அணுகுமுறையை இங்கிலாந்து அணியில் கொண்டு வந்துள்ளார்.

- Advertisement -

அதைப் பின்பற்றி குறைந்தபட்சம் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி எதிரணிகளை அடித்து நொறுக்கி தொடர்ந்து வெற்றிகளை கண்டு வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் காயத்தால் இத்தொடரில் விளையாடுவது கண்டிப்பாக இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் அவருக்கு பதிலாக ஓலி போப் இலங்கை டெஸ்ட் தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்றும் இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மழை காப்பாத்துனா தான் உண்டு.. கில்லஸ்பி ஆஸி வேலையை பாகிஸ்தான் அணியில் காட்டக்கூடாது.. பசித் அலி

இதற்கிடையே முன்னாள் இங்கிலாந்து நட்சத்திர வீரர் இயன் பெல் இத்தொடரில் தங்களுடைய பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்று இலங்கை வாரியம் அறிவித்துள்ளது. அவருடைய அனுபவம் கண்டிப்பாக இத்தொடரில் இங்கிலாந்தை வீழ்த்த இலங்கை அணிக்கு பெருமளவு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பென் ஸ்டோக்ஸ் இல்லாத சமயத்தை பயன்படுத்தி இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு இதை விட இலங்கைக்கு நல்ல வாய்ப்பு கிடைக்காது என்றால் மிகையாகாது.

Advertisement