அவரை மாதிரி ஒரு ஃபிட்டான வீரரை நான் பாத்ததே இல்லை.. சீனியர் வீரரை பாராட்டிய – பென் ஸ்டோக்ஸ்

Stokes
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த ஆரம்பிப்பதற்கு முன்னதாக முகமது ஷமி, விராட் கோலி போன்றவர்கள் வீரர்கள் வெளியேறியதாலும் கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதாலும் இங்கிலாந்து அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் பலரும் கூறியிருந்தனர்.

அதன்படியே இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெற்றியுடன் துவங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்த காத்திருந்தது. ஆனால் இரண்டாவது போட்டியிலிருந்து தங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது அவர்களை திணற வைத்தது.

- Advertisement -

குறிப்பாக அடுத்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 112 ஆண்டு கால வரலாற்றில் முதல் போட்டியை தோற்றுவிட்டு அடுத்து வந்த அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற முதல் அணியாக இந்திய அணி வரலாற்று சாதனையும் நிகழ்த்தி இருந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் மூன்றாவது நாளிலேயே இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசியருந்த பென் ஸ்டோக்ஸ் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் மைதானத்தில் ஒன்றாக இணைந்து விளையாடுவது என்பது மிகச் சிறப்பான தருணம். ஒரு வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பதெல்லாம் மிகச் சிறப்பான ஒரு சாதனை.

இதையும் படிங்க : ஃபைனலில் 111/6 என சரிந்த மும்பை.. 8 போர்ஸ் 3 சிக்ஸருடன் காப்பாற்றிய தாக்கூர்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

அவர் முதல் போட்டியில் விளையாடியதிலிருந்து தற்போது வந்திருக்கும் தூரம் வரை அனைத்துமே நம்ப முடியாத பயணமாக இருந்திருக்கிறது. அவருடைய அர்ப்பணிப்பும் அவருடைய ஆர்வமும் இதன் மூலம் நன்றாக நமக்குத் தெரிகிறது. களத்தில் அவர் கொடுக்கும் ஈடுபாடு இன்றளவும் அவரை பிட்டான வீரராகவே வைத்திருக்கிறது. அவரைப் போன்ற ஒரு பிட்டான வீரரை நான் பார்த்ததில்லை என பென் ஸ்டோக்ஸ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement