அவரது காட்டுல அடைமழை. கெத்து காட்டும் ஸ்டோக்ஸ். ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியல் – பாருங்க புரியும்

Stokes

கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சர்வதேச டெஸ்ட் தொடர் கடந்த 8 ஆம் தேதி துவங்கியது.

wi

இந்நிலையில் மூன்று மாத கால இடைவெளிக்குப் பிறகு நடந்த இந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் வெற்றி பெற்று புள்ளிக்கணக்கினை துவங்கியது.

அதனைத்தொடர்ந்து மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சம நிலையை எட்டியது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை (24ஆம் தேதி) மான்செஸ்டர் நகரில் தூங்குகிறது.

broad

இந்நிலையில் இந்த போட்டி முடிவின் அடிப்படையில் ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த புதிய தரவரிசைப் பட்டியலில் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக 57 பந்துகளில் 78 ரன்கள் விளாசிய பென் ஸ்டோக்ஸ் 101 புள்ளிகள் கூடுதல் பெற்று 827 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன் தரவரிசையில் மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய வீரர் லாபுஷேனுடன் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

முதலிடத்தில் ஸ்டீவன் ஸ்மித் (911 புள்ளிகள்), இரண்டாவது இடத்தில் கோலி (886 புள்ளிகள்) ஆகியோர் தொடர்ந்து நீடிக்கிறார்கள். மேலும் இந்த அதிரடியான சிறப்பான பேட்டிங், பவுலிங் என அசத்திய ஸ்டோக்ஸ் முதல் முறையாக ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Stokes

இந்த டெஸ்டில் ஒரு சதம் ஒரு அரை சதம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்த 66 புள்ளிகளை பெற்று 497 புள்ளிகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே ஹோல்டர் மற்றும் ஜடேஜா ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.