சுயநலம் பரவால்ல.. இந்தியாவின் சச்சினை முந்தப்போகும் ரூட்டை யாராலும் தொட முடியாது.. பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes
- Advertisement -

நூற்றாண்டு சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 15921 ரன்கள் குவித்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை அவர் தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அந்த சாதனையை தற்போது உடைப்பதற்காக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் வேகமாக வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.

ஏனெனில் சமீப காலங்களில் அபாரமாக விளையாடி வரும் அவர் இதுவரை 146 போட்டிகளில் கிட்டத்தட்ட 12,500 ரன்கள் குவித்துள்ளார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் 4 வருடங்கள் விளையாடி 3000 – 4000 ரன்கள் அடிப்பதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. எனவே சச்சின் டெண்டுல்கரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் உலக சாதனை படைப்ப்பார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சச்சினை முந்துவரா:

இந்நிலையில் உலக சாதனைப் பட்டியலில் இந்தியரே இருக்க வேண்டும் என்பதில்லை என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். எனவே 33 வயதாகும் ஜோ ரூட் கண்டிப்பாக சச்சினை முந்தி 17000 – 18000 அளவுக்கு கூடுதல் ரன்கள் குவித்து வருங்காலத்தில் யாராலும் உடைக்க முடியாத உலக சாதனையை படைப்பார் என்று பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“33 வயதாகும் ரூட் தொடர்ந்து 100 போட்டிகளில் விளையாடியுள்ளாரா என்பது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் அவரால் 37 முதல் 39 வயது வரை எளிதாக விளையாட முடியும். அதுவரை இங்கிலாந்து விளையாடும் அனைத்து போட்டிகளிலும் அவர் விளையாடுவார். அப்படி விளையாடும் போது ஏன் அவர் அந்த சாதனையை உடைக்க மாட்டார்? குறைந்தபட்சம் அதை நெருங்குவதற்கு அவர் சிறந்த கிரிக்கெட் வீரர்”

- Advertisement -

உச்சம் தொடுவார்:

“தனிப்பட்ட முறையில் அவர் அந்த சாதனையை உடைக்கவே நான் விரும்புகிறேன். அவ்வளவு ரன்கள் அடிக்கும் போது அந்த வீரரிடம் கொஞ்சம் சுயநலம் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஜோ ரூட் அணிக்காகவே பேட்டை கையில் எடுக்கிறார். கடந்த சில வருடங்களில் இருந்து அவர் அரை சதத்தை சதமாக மாற்றுவதை வழக்கமாக வைத்திருப்பதை நான் பார்க்கிறேன்”

இதையும் படிங்க: 5000 ரன்ஸ்.. எனக்கு எண்டே கிடையாது.. அலெஸ்டர் குக்கை முந்தி ரூட் உலக சாதனை.. அடுத்த டார்கெட் சச்சின்

“என்னுடைய பார்வையில் அவருடைய சதங்களால் இங்கிலாந்து எத்தனை போட்டிகளில் வெல்கிறது என்பதையே பார்க்கிறேன். உண்மையில் சுயநலமின்றி விளையாடுவதே அவரைப் பற்றிய சிறந்த விஷயமாகும். அவர் எப்போதும் அணியையே முதலாவதாக முன்னிலைப்படுத்துவார். அவர் படைக்கப் போகும் சாதனையை வேறொருவர் உடைப்பதற்கு மிக மிக நீண்ட காலங்கள் ஆகும்” என்று கூறினார்.

Advertisement