இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு – இதுல ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Stokes
- Advertisement -

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக இருந்து வந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் கடந்த வாரம் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 64 போட்டிகளில் 27 வெற்றிகளை பதிவு செய்த அவர் அதிக போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த இங்கிலாந்து வீரர் மற்றும் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து கேப்டன் போன்ற சாதனைகளை படைத்த அதேசமயம் 26 தோல்விகளுடன் அதிக தோல்விகளை பதிவு செய்த கேப்டன் என்ற பரிதாப சாதனையும் படைத்துள்ளார்.

Root

- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே அவர் தலைமையிலான இங்கிலாந்து தொடர்ச்சியாக சொந்த மண்ணில் கூட தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் 4 – 0 என்ற கணக்கில் படுமோசமான தோல்வியை சந்தித்து மண்ணை கவ்வியது. இருப்பினும் தொடர்ந்து கேப்டனாக செயல்பட விரும்பிய அவருக்கு கடைசி முறையாக கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது.

கேப்டன் பென் ஸ்டோக்ஸ்:
ஆனால் அதிலும் அவர் தலைமையில் 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வி அடைந்ததை அடுத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளான அவரை கிரிக்கெட் வாரியம் பதவி நீக்கம் செய்வதற்கு முன்பாக கௌரவமாக விடை பெறுமாறு மைக்கேல் வாகன் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் வெளிப்படையாகவே அழுத்தம் கொடுத்தனர். அதன் காரணமாக கடந்த வாரம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த அவர் தொடர்ந்து ஒரு பேட்ஸ்மேனாக இங்கிலாந்தின் வெற்றிக்கு பாடுபட போவதாக அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வியும் அதற்கு உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக கருதப்படும் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்ற பதிலும் வலம் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கிலாந்தின் 81-வது டெஸ்ட் கேப்டனாக பெஞ்சமின் ஸ்டோக்ஸ் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ஸ்டோல்ஸ் எழுச்சி:
1. நியூஸிலாந்தில் பிறந்த அவர் அதன்பின் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து கடந்த 2013இல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த சமயத்தில் வளர்ந்து வரும் வீரராக கருதப்பட்ட அவர் இந்தியாவில் நடந்த 2016 ஐசிசி டி20 உலக கோப்பையின் கடைசி ஓவரில் மோசமான பந்து வீச்சால் 4 சிக்சர்களை கார்லஸ் ப்ரத்வைட்டுக்கு கொடுத்து கோப்பையை வெஸ்ட் இண்டீசுக்கு பரிசளித்தார்.

2. அதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான அவர் அதன்பின் தன்னை தானே பட்டை தீட்டிக்கொண்டு 2019 உலக கோப்பை இறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கிலாந்து ஒரு உலக கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்ற எழுச்சி கண்டார்.

- Advertisement -

3. அதைவிட அதே 2019இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹெண்டிங்க்லே நகரில் நடைபெற்ற ஆஷஸ் போட்டியில் தனி ஒருவனாக போராடிய அவர் 135* ரன்கள் விளாசி வரலாற்றின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்சை விளையாடி உலகப்புகழை பெற்றார்.

Stokes

4. அதன்பின் கடந்த வருடம் மன நிலையைப் பாதுகாக்கும் வகையில் எந்த வித தயக்கமும் இல்லாமல் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக விடை பெற்று இதர வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளுக்காக ஐபிஎல் தொடரையும் புறக்கணித்த அவர் தற்போது முழுநேர டெஸ்ட் கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

காலத்தின் வேகம்:
அந்த அளவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட்டின் மீது நேசம் வைத்துள்ள அவர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். இந்தப் பொறுப்பை மிகப் பெரிய கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ் முதல் டெஸ்ட் போட்டிக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

INDvsENG

ஏற்கனவே கடந்த 2017 முதல் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்துக்கு துணை கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் 2020இல் அவர் இல்லாத சமயத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு போட்டியில் கேப்டன்ஷிப் செய்துள்ளார். இருப்பினும் முழுநேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் வரும் ஜூலை 1-ஆம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது பயணத்தை தொடங்க உள்ளார்.

கடந்த வருடம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொண்டு அதில் அபாரமாக செயல்பட்டு 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என முன்னிலை பெற்றது. ஆனால் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அந்த தொடரின் கடைசி போட்டி தான் ஜூலை 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க : 15 வருஷமா நீங்க என்ன பண்ணீங்களோ அதையே திருப்பி பண்ணுங்க – கோலிக்கு அட்வைஸ் கொடுத்த யுவ்ராஜ்

அதில் ஆச்சரியப்படும் வகையில் காலத்தின் வேகமான சுழற்சியால் முதல் 4 போட்டிகளுக்கு கேப்டன்களாக இருந்த விராட் கோலியும் ஜோ ரூட்டும் ஒரு சாதாரண வீரராக விளையாட உள்ளனர். மறுபுறம் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சந்திக்க உள்ளது.

Advertisement