124 பந்தில் 182 ரன்கள்.. ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை படைத்த பின்னர் ஜேசன் ராயிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்

Stokes-and-Roy
- Advertisement -

இங்கிலாந்து அணி தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் இருந்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 368 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மலான் 96 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 182 ரன்களையும் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 369 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணி 39 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 187 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 124 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என 182 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் :

- Advertisement -

நான் ஜேசன் ராயிடம் மன்னிப்பு கேட்ட கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அதற்கு காரணம் யாதெனில் : இங்கிலாந்து அணி சார்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வீரராக ஜேசன் ராய் முதலிடத்தில் இருந்த வேளையில் தற்போது அவரது சாதனையை பென் ஸ்டோக்ஸ் 182 ரன்கள் மூலம் முறியடித்துள்ளார். இதன் காரணமாகவே பென் ஸ்டோக்ஸ் மன்னிப்பு கேட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : உலகின் சிறந்த பவுலிங் அட்டாக்கிற்கு இந்த நிலையா? இந்தியா அடிச்ச அடில எங்க பவுலர்கள் சிதைஞ்சுட்டாங்க – பாக் கோச் பேட்டி

நியூசிலாந்து அணியை அழுத்தத்திற்குள் வைத்து மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன்படியே எங்களது பேட்டிங் மிகவும் பாசிட்டிவாக இருந்தது. அதேபோன்று பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்படவே எங்களால் நியூசிலாந்து அணியை வீழ்த்த முடிந்தது. டேவிட் மலான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோன்று எங்களது அணியின் வீரர்களும் சரியான அளவில் பங்களிப்பினை வழங்குவதால் எங்களால் வெற்றி பெற முடிந்தது என ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement