IND vs ENG : ரோஹித் சர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதி – அணியில் இருந்து விலகல்

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியானது ஜூலை 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி தற்போது கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது. இந்த 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Rishabh Pant

- Advertisement -

இம்முறை இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி பயோ பபுள் விதி முறையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதன் காரணமாக வீரர்கள் சற்று சுதந்திரமாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அணிக்குள் கொரோனோ பாதிப்பும் ஏற்பட்டது. அந்த வகையில் ஏற்கனவே அஸ்வின் மற்றும் விராட் கோலி ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

அதேவேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா வைரஸ் உறுதியானதன் காரணமாக இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்திய அணிக்கு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ben Foakes

ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட இந்த கொரோனா பாதிப்பு இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மாவை தொடர்ந்து மேலும் ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் உறுதியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பென் போக்ஸ்க்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரராக யாரை நியமிப்பது என்ற தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : இருவருக்குமிடையே விரிசல் ! வளர்த்த கிடா மார்ல பாய்ஞ்சிடுச்சு, குமுறும் மும்பை ரசிகர்கள் – என்ன நடந்தது?

இருப்பினும் இங்கிலாந்து அணியில் கூடுதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கும் பேர்ஸ்டோ இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement