இருவருக்குமிடையே விரிசல் ! வளர்த்த கிடா மார்ல பாய்ஞ்சிடுச்சு, குமுறும் மும்பை ரசிகர்கள் – என்ன நடந்தது?

mi
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஜூலை 1இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு ஐபிஎல் 2022 கோப்பையை முதல் வருடத்திலேயே குஜராத்துக்கு வென்று காட்டிய ஹர்டிக் பாண்டியா இந்த தொடரின் கேப்டனாக செயல்பட உள்ளார். அவருடன் ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் ஆகியோருடன் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் அசத்திய பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

இந்த தொடரில் முதல் முறையாக இந்தியாவின் கேப்டனாக செயல்படும் ஹர்டிக் பாண்டியா கடந்த 2021 டி20 உலக கோப்பைக்கு இதே தேர்வுக் குழுவினரால் அதிரடியாக நீக்கப்பட்டவர். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் அசத்தியதால் கடந்த 2016இல் எம்எஸ் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அடுத்த சில வருடங்களில் 3 வகையான இந்திய அணியிலும் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராகும் அளவுக்கு பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பாண்டியாவின் எழுச்சி:
அதனால் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒருவழியாக இந்தியாவுக்கு ஒரு நல்ல தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 2019 உலகக் கோப்பைக்கு பின் காயமடைந்த இவர் ஐபிஎல் தொடரில் வழக்கம்போல பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராகவே செல்லப்பட்டார். இருப்பினும் இவரை நம்பிய தேர்வு குழுவினர் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்திருந்தனர். ஆனால் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே பந்து வீசாத அவர் அந்தத் தொடர் முழுவதும் ஒருசில ஓவர்கள் மட்டுமே பந்துவீசி பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டது இந்தியாவுக்கு படுதோல்வியை பரிசளித்தது.

அதனால் அதிருப்தியடைந்த தேர்வுக்குழுவினர் இனிமேல் முழுமையாக குணமடைந்து பந்து வீசினால் மட்டுமே இந்திய அணியில் இடம் என்று அதிரடியாக நீக்கினார்கள். அதே காரணத்துக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த போதிலும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் அவரை கழற்றி விட்டது. இருப்பினும் மனம் தளராமல் தன்னை 15 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து வாங்கிய குஜராத்துக்கு ஐபிஎல் 2022 தொடரில் 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளையும் எடுத்து மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்ட அவர் அனுபவமில்லாத கேப்டன்சிப் பதவியில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டினார்.

- Advertisement -

ரோஹித் – பாண்டியா விரிசல்:
அதனால் ஒரு கட்டத்தில் அதிரடியாக நீக்கிய தேர்வு குழுவினர் தாமாக முன்வந்து தேர்வு செய்யும் அளவுக்கு விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்த ஹர்திக் பாண்டியா இன்று இந்தியாவின் கேப்டனாகி அபார வளர்ச்சியும் எழுச்சியும் கண்டுள்ளார். இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்தியாவின் கேப்டனான செயல்படும் அவர் தனது முதல் போட்டிக்கு முன்பாக ஜூன் 25-ஆம் தேதியான நேற்று நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கேப்டன்ஷிப் பற்றி பேசியது பின்வருமாறு. “கேப்டனாக விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரிடம் நிறைய அம்சங்களை கற்றுள்ளேன். அதேசமயம் இயற்கையாக ஒரு கேப்டனாக களத்திலிருந்து எதார்த்தத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுக்கவும் விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் தோனி, விராட் கோலி பெயரை கூறிய அவர் காலம் காலமாக ஐபிஎல் தொடரில் வாய்ப்பளித்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கும் அளவுக்கு வளர்த்து விட்ட ரோகித் சர்மாவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாததை பார்த்த மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2019க்கு பிந்தைய காலங்களில் காயமடைந்த போதிலும் மும்பை அணியில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக வாய்ப்பளிக்காமல் இருந்திருந்தால் இன்று பாண்டியா இந்த அளவுக்கு உயர்ந்திருக்க முடியுமா என்ற கோணத்தில் நிறைய மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவர் மீது அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் பேட்டி மட்டுமல்லாது ஐபிஎல் தொடரில் முதல் முறையாக குஜராத்தின் கேப்டனாக செயல்பட்ட போதும் எம்எஸ் தோனியையே அதிகம் பின்பற்றுவதாக பாண்டியா கூறியதை சுட்டிக்காட்டும் ரசிகர்கள் ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கிடையே ஏதோ ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க : டி20 போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் கம்பேக் கொடுப்பது ரொம்ப கடினம் – இந்திய வீரர் பற்றி வாசிம் ஜாபர் கருத்து

அத்துடன் இப்படி பழைய ஆதரவை மறந்து வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தத போல் நடந்து கொள்ளும் ஹர்திக் பாண்டியாவை மேற்கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் தக்கவைக்காமல் விடுவித்தது மிகச் சிறந்த முடிவு என்றும் மும்பை ரசிகர்கள் வகைவகையாக பேசுகின்றனர்.

Advertisement