ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் – காரணம் என்ன?

Ben Duckett
- Advertisement -

இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் சில வீரர்கள் காயம் காரணமாகவும், சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் 2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெற முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ள வேளையில் பல்வேறு அணிகளும் பெரிய பின்னடைவை சந்திக்க காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்து வீரருக்கு 2 ஆண்டு தடை விதித்த ஐ.பி.எல் நிர்வாகம் :

இவ்வேளையில் கடந்த 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 2 கோடி ரூபாய் என்கிற விலைக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் தற்போது எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார். அப்படி அவர் வெளியிட்ட அறிவிப்பில் இங்கிலாந்து அணிக்காக விளையாட உள்ளதால் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து தான் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக பென் டக்கெட் கூறுகையில் : சிறு வயதிலிருந்தே நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதையே என் கனவாக வைத்து வருகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன். அதன் காரணமாக இந்த கோடை காலத்திற்கு முன்னதாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்த நிலையில் இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டும்.

எனவே டெல்லி அணியின் நிர்வாகத்தினர் அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த முடிவு ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு இடையூறுக்கும் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். இப்படி ஐபிஎல் ஏலத்தில் வழங்கப்பட்ட ஒருவர் தனிப்பட்ட காரணங்களால் விலகினால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட சம்பந்தப்பட்ட வீரருக்கு தடை விதிக்கப்படும் என்பது விதி.

- Advertisement -

இதையும் படிங்க : ரிங்கு சிங்கிற்கு புதிய பதவியை அளித்து அதிரடி காட்டிய கே.கே.ஆர் அணியின் நிர்வாகம் – விவரம் இதோ

அந்த வகையில் பென் டக்கெட் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதற்காகவே இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் இதேபோன்று தனிப்பட்ட காரணங்களால் விலகியதால் அவருக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement