நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 28-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தற்போது தங்களது அணியின் வீரர்களின் ஒன்றிணைத்து தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இந்த தொடருக்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது.
ரிங்கு சிங்கிற்கு புதிய பதவியை அளித்த கே.கே.ஆர் நிர்வாகம் :
இந்நிலையில் இந்த 2026 ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தற்போது கே.கே.ஆர் அணியின் நிர்வாகம் ஒரு முக்கிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கே.கே.ஆர் அணியின் கேப்டனாக ரஹானே தொடர்வார் என்றும் துணை கேப்டனாக இளம் வீரர் ரிங்கு சிங் செயல்பட இருக்கிறார் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வரும் ரிங்கு சிங்கை துணை கேப்டனாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சி.இ.ஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த ரிங்கு சிங்குக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் முக்கிய வீரராக இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். அதன் காரணமாகவும் கே.கே.ஆர் அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருவதாலும் அவருக்கு இந்த துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியில் என்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கு காரணமே இவர்தான் – க்ருனால் பாண்டியா பேட்டி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 13 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ரிங்கு சிங் இதுவரை 59 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 30 ரன்கள் சராசரி உடனும், 145 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1099 ரன்களை அந்த அணிக்காக குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



