கோலி இந்த விடயத்தில் மூக்கை நுழைக்க நாங்கள் விடமாட்டோம் – பி.சி.சி.ஐ கட்டளை

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

ravi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தொடர்ந்து நேற்றோடு அந்த விண்ணப்பிக்கும் நாள் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரவிசாஸ்திரி தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெரிய அளவில் உதவி புரிவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். மேலும் இதுநாள்வரை இந்திய அணி குறித்து அனைத்து முக்கிய முடிவுகளையும் இவர்கள் இருவரும் சேர்ந்தே எடுக்கின்றனர். #

ravi koli 2

அதன்படி புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கபில்தேவ் தலைமையில் அடங்கிய குழுவே தெரிவு செய்யும் என்றும் மேலும் இந்த குழு யாரைப் பரிந்த்துரைக்கிறதோ அவர்களே இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார்கள் என்று பி.சி.சி.ஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பயிற்சியாளர் குறித்து கோலி கருத்தினை மட்டும் தெரிவிக்கலாமே தவிர கட்டளை ஏதும் செய்ய முடியாது என்று தெள்ளத்தெளிவாக பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement